காஷ்மீர் விவகாரத்தில் மோதி கொண்ட அஃப்ரிடி, காம்பீர்

Vijay R | news18
Updated: August 6, 2019, 5:22 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் மோதி கொண்ட அஃப்ரிடி, காம்பீர்
அஃப்ரிடி - காம்பீர்
Vijay R | news18
Updated: August 6, 2019, 5:22 PM IST
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அஃப்ரிடி கருத்திற்கு இந்திய வீரர் கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், காஷ்மீர் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் ஐ.நா சபை உறுதியளித்தபடி வழங்க வேண்டும். சுதந்திர உரிமை என்பது அனைவருக்கும் சொந்தமானது தான். ஐ.நா சபை உருவாக்கப்பட்டது ஏன்? அது ஏன் தற்போது தூங்குகிறது? காஷ்மீர் மாநிலத்தில் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் கேட்டு கொண்டுள்ளார்.அஃப்ரிடியின் இந்த கருத்திற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்பீர், “இவை அனைத்தும் குற்றச்செயல்களுக்கு எதிரான மனிதநேய நடவடிக்கை. இதற்கு குரல் கொடுக்கும் அப்ஃரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் குற்றசெயல்கள் குறித்து பேச மறந்துள்ளார். கவலை வேண்டாம் மகனே... இவை அனைத்தும் தீர்க்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...