கம்பீர், பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையை உடையவர்: முன்னாள் பயிற்சியாளர் பகீர் தகவல்!

#GautamGambhir was insecure: former mental conditioning coach #PaddyUpton | கிரிக்கெட் இன்னிங்சை முடித்துவிட்ட கம்பீர், தற்போது தனது 2-வது இன்னிங்சை அரசியலில் தொடங்கியுள்ளார்.

கம்பீர், பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையை உடையவர்: முன்னாள் பயிற்சியாளர் பகீர் தகவல்!
டெஸ்ட் பேட்ஸ்மேனாக கவுதம் கம்பீர் . (AFP)
  • News18
  • Last Updated: May 1, 2019, 6:39 PM IST
  • Share this:
கவுதம் கம்பீர் பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையைக் கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தொடக்க வீரராக வலம் வந்தவர் கவுதம் கம்பீர். அண்மையில், இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார்.

Gambhir
மைதானத்தில் இருந்து வெளியேறும் கம்பீர். (BCCI)கிரிக்கெட் இன்னிங்சை முடித்துவிட்ட அவர், தற்போது தனது 2-வது இன்னிங்சை அரசியலில் தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த கம்பீர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி பகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் மனநல பயிற்சியார் பேடி அப்டன் தனது புத்தகத்தில், கவுதம் கம்பீர் பாதுகாப்பற்ற பலவீனமான மனநிலையைக் கொண்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
Paddy Upton, பேடி அப்டன்
இந்திய அணியின் முன்னாள் மனநல பயிற்சியார் பேடி அப்டன்.


அதில், “கம்பீர் சிறந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர். 2009-ம் ஆண்டில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். பலவீனமான மற்றும் பாதுகாப்பற்ற மனநிலையைக் கொண்டவர். ஏனென்றால், 150 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாலும், 200 ரன்கள் அடிக்க முடியவில்லையே என அதிருப்தி அடைவார். இருப்பினும் அவர் சிறந்த பேட்ஸ்மேன்” என பேடி அப்டன் தெரிவித்துள்ளார்.

பேடி அப்டன், நடப்பு ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மனநல பயிற்சியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் திடீர் விலகல்... பஞ்சாப் அணிக்கு புதிய சிக்கல்!

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் ஸ்மித்... ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான்...?

ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading