ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் தொடக்க வீரராக விளையாட வேண்டும்’ – கவுதம் காம்பீர் வலியுறுத்தல்

‘ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் தொடக்க வீரராக விளையாட வேண்டும்’ – கவுதம் காம்பீர் வலியுறுத்தல்

இஷான் கிஷன் - கவுதம் காம்பீர்

இஷான் கிஷன் - கவுதம் காம்பீர்

இந்திய அணியின் மற்றொரு முக்கிய வீரரான சூர்ய குமார் யாதவின் ஒருநாள் போட்டி பர்பார்மென்ஸ் பாராட்டும்படியாக இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த நிலையில் காம்பீர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த போட்டியில் வெறும் 126 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் மிக எளிதாக இரட்டை சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதம் இதுவாக அடைந்தது.

தற்போது இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முன்னணி வீரர் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து கே.எல். ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரோகித்துடன் இளம் வீரரை தொடக்க வீரராக அனுப்ப வேண்டும் என்று கவுதம் காம்பீர் சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அந்த இளம் வீரர் இஷான் கிஷன் என்று காம்பீர் இன்று தெரிவித்துள்ளார். சிறப்பான பந்து வீச்சுக்கு எதிராக இஷான் இரட்டை சதம் அடித்துள்ளார் என்று பாராட்டியுள்ள காம்பீர், தொடக்க வீரராக களத்தில் இறங்க அவர்தான் பொருத்தமானவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ’35 ஆவது ஓவரிலேயே இஷான் கிஷன் இரட்டை சம் அடித்துள்ளார். அவரை தவிர்த்து மற்ற யாரை இந்திய அணியின் தொடக்க வீரராக நாம் நினைத்துப் பார்க்க முடியும். அவரால் ரன்னும் குவிக்க முடிகிறது. விக்கெட்டையும் காப்பாற்ற முடிகிறது.

என்னை பொருத்தளவில் ரோகித் சர்மாவும் இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக விளையாட வேண்டும். அடுத்ததாக விராட் கோலியும், அவரைத் தொடர்ந்து சூர்ய குமாரும், 5 ஆவது வீரராக ஷ்ரேயாஸும் களமிறங்க வேண்டும். 6 ஆவதாக ஹர்திக் பாண்ட்யா விளையாடலாம்’ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு முக்கிய வீரரான சூர்ய குமார் யாதவின் ஒருநாள் போட்டி பர்பார்மென்ஸ் குறிப்பிடும்படியாக இல்லை. 4ஆவது வீரராக விளையாடும் அவர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 2 அரைச் சதங்கள் அடங்கும்.

இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

ரிஷப் பந்த்திற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை… அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக் , சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி – 

நினைவுகள் 2022: சென்னையில் செஸ் ஒலிம்பியாட்.. விம்பிள்டனில் அசத்திய நோவக் ஜோகோவிச்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் தொகுப்பு

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (வி.சி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

First published:

Tags: Cricket