டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டுக் கூட்டத்தில் கைகலப்பு... வீடியோ வெளியிட்டு கம்பீர் விளாசல்...!

டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டுக் கூட்டத்தில் கைகலப்பு... வீடியோ வெளியிட்டு கம்பீர் விளாசல்...!
  • Share this:
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 600 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி பாதர் அகமதை, சங்கத்தில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறிது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


இந்த மோதல் வீடியோவை கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் மோதலில் ஈடுப்பட்டவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும். சங்கத்தை உடனடியாக கலைக்க வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்கம் இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading