தோனியின் பிறந்தநாளில் மறைமுகமாகக் குத்திக் காட்டிய கவுதம் கம்பீர்- ரசிகர்கள் ஆவேசம்

கம்பீர்.

தல பிறந்த தினத்தின் போது இந்தப் படத்தை கவுதம் கம்பீர் வேண்டுமென்றே போட்டாரா? தோனிக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டாம் குறைந்தது இந்தப் படத்தை போட்டு தோனியை மறைமுகமாகக் குத்தி காட்டுவதா? என்றெல்லாம் தோனியின் ரசிகமணிகள் பொங்கி எழுந்துள்ளனர்.

 • Share this:
  தல, கேப்டன் கூல், கிரேட் ஃபினிஷர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் 40-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டதையடுத்து ரசிகர்கள் முன்னாள் வீரர்கள், நடப்பு வீரர்கள் என்று வாழ்த்து மழை பொழிய கவுதம் கம்பீர் வித்தியாசம் காட்டினார்.

  குறிப்பாக நாயக வழிபாடு, வெறித்தன ரசிகர்கள் தங்கள் தல தோனியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இருக்கும் போது கவுதம் கம்பீர் தன் முகநூல் கவர் போட்டோவை மாற்றியுள்ளார், அதாவது 2011 உலகக்கோப்பையில் கம்பீர் மிகப்பிரமாதமாக ஆடி 97 ரன்களைக் குவித்த அடித்தளத்தில்தான் தோனியின் ஹீராயிசம் கட்டபட்டது. தனது 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்னிங்ஸ் படத்தை முகநூல் கவர் போட்டோவாக கம்பீர் மாற்றிவிட்டார். உடனே கேட்க வேண்டுமா? தோனியின் கொடுக்குகள் உள்ளே புகுந்து கம்பீரை காய்ச்சி எடுத்தனர்.

  உடனே தல பிறந்த தினத்தின் போது இந்தப் படத்தை கவுதம் கம்பீர் வேண்டுமென்றே போட்டாரா? தோனிக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டாம் குறைந்தது இந்தப் படத்தை போட்டு தோனியை மறைமுகமாகக் குத்தி காட்டுவதா? என்றெல்லாம் தோனியின் ரசிகமணிகள் பொங்கி எழுந்துள்ளனர்.

  சேறுபடிந்த ஷர்ட்டுடன் கவுதம் கம்பீர்.


  அவர் முகநூல் பக்கம் அவர் தன் இஷ்டத்துக்கு படத்தை மாற்ற உரிமை உண்டு, அன்று தோனி பிறந்தநாளாக இருக்கலாம். கவாஸ்கர் பிறந்தநாளாக இருக்கலாம் கபில் பிறந்த நாளாக இருக்கலாம்.. அதனால் என்ன? ஒருவர் பிரபலம் என்பதற்காகவே தான் செய்யும் காரியங்களுக்கெல்லாம் ரசிகமணிகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என்பது நம் கிரிக்கெட் ரசிகமணிகளுக்கும் நாயகவழிபாடு கொடுக்குகளுக்கும் புரியம் காலம் எப்ப வருமோ?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நிறைய ரசிகர்கள் கம்பீரை விமர்சிக்கும் போது உங்கள் இன்னிங்ஸ் பெரியதுதான் ஆனால் உங்கள் நடத்தை பெரிய மனுஷத்தனமாக இல்லை என்று விமர்சித்துள்ளான்ர். இன்னும் சிலர் கம்பீர் உங்களுக்கு தோனி மேல் எத்தனை பொறாமை உள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று சாடியுள்ளனர்.

  ஒருவர் நகைச்சுவையாக இந்தப் பதிவுக்கு கம்பீருக்கு மேன் ஆப் த மேட்ச் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். ஆனால் வேறு சிலர் கம்பீருக்கு ஆதரவு தெரிவித்து போஸ்ட் செய்துள்ளனர்.

  தோனி உங்கள் வாழ்நாள் சாதனை கம்பீரின் அந்த அழுக்கு படிந்த சட்டைக்கு முன்னால் ஒன்றுமில்லை என்று போட்டுள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: