• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • குல்தீப், சிராஜ், இல்லை, இஷாந்த், ஷாபாஸ் நதீம் அணியில்: கம்பீர் அதிர்ச்சி

குல்தீப், சிராஜ், இல்லை, இஷாந்த், ஷாபாஸ் நதீம் அணியில்: கம்பீர் அதிர்ச்சி

கம்பீர்.

கம்பீர்.

சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    இந்திய முன்னாள் தொடக்க வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் சென்னை டெஸ்ட் போட்டியில் சிராஜ், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளார்.

    ஆனால் அதே வேளையில் இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீமை தேர்வு செய்தது அதிர்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் கம்பீர்.

    “உள்ளபடியே கூற வேண்டுமெனில் குல்தீப் இல்லாதது துரதிர்ஷ்டமே. இங்கிலாந்துக்கு எதிராக குல்தீப் யாதவைத்தான் தேர்வு செய்திருக்க வேண்டும். ரிஸ்ட் ஸ்பின்னர் என்பவர் ஒரு அரிதான வீரர் ஆவார்.

    அவர் அணியில் இருக்கிறார், கொஞ்ச நாட்களாக அவர் ஆடாததால் இங்கிலாந்துக்கும் அவர் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்க முடியும். குல்தீப் ஒரு சொத்து.

    ரிஸ்ட் ஸ்பின்னர் எப்படி ஆட்டத்தையே மாற்றுவார் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். இரண்டு ஆஃப் ஸ்பின்னர்களுடன் ஆடுவதும் ஆச்சரியமளிக்கிறது. பேட்டிங்கில் கடைசி வரைக்கும் வலுதேவை என்று நினைத்திருக்கலாம்.

    மீண்டும் இன்னொரு பெரிய சர்பிரைஸ் இஷாந்த் சர்மா, அவர் சிகப்புப் பந்து கிரிக்கெட் ஆடி சில காலம் ஆகிவிட்டது, அவரை எப்படி சிராஜுக்குப் பதிலாக எடுத்தார்கள் என்பதும் ஆச்சரியமே” என்றார் கம்பீர்.

    சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது. சற்று முன் வரை அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. முதல் சென்னை பிட்சில் விக்கெட்டுகள் எடுப்பது அவ்வளவு சுலபமல்ல.

    ஜோ ரூட் 60 ரன்களுடனும், சிப்லி 60 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

    முன்னதாக பும்ரா தன் முதல் விக்கெட்டை இந்தியாவில் வீழ்த்தினார். டேன் லாரன்ஸ் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார்.

    ரோரி பர்ன்ஸை அஸ்வின் வீழ்த்தினார். இப்போதைக்கு இந்திய அணி விக்கெட் எடுக்க திண்டாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: