இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாகவும் சிலருக்கு அதிர்ச்சி ஏற்படும் விதமாகவும் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டை உட்கார வைத்து தினேஷ் கார்த்திக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தார் ரோஹித் சர்மா. போட்டியை வென்றாலும் இது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
உலகக்கோப்பை டி20 வரவிருக்கும் நிலையில் இன்னும் பிளேயிங் லெவனையே முடிவு செய்யாமல் இன்னும் பரிசோதனைகள் செய்து கொண்டிருப்பதா, எனது அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடமில்லை, ரிஷப் பண்ட்டுக்குத்தான் முன்னுரிமை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பண்ட்டை அணியில் சேர்க்காதது குறித்து கம்பீர் கூறுகையில், “டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி ஐந்து அல்லது 6 போட்டிகளில்தான் விளையாடுகிறது. இன்னும் நீங்கள் பிளேயிங் லெவனை தீர்மானிக்கவில்லை என்றால் எப்போது செய்யப்போகிறீர்கள்.
Also Read: யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு, தோனி சாதனை சமன்: ‘சபாஷ்’ பாண்டியா
எனது அணியில் எப்போதுமே ரிஷப் பண்ட்க்குதான் முதலிடம், தினேஷ் கார்த்திக்கிற்கு கிடையாது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கூட இல்லை. இது அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்” என்றார். முதல் போட்டியில் எப்படியோ போராடி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா பேட்டிங்கினால் இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் இன்னும் 10 ரன்கள் கூட எடுத்திருந்தால் கூட இந்திய அணிக்கு திண்டாட்டம்தான், அந்த நிலையில் தோற்றிருந்தால் ரிஷப் பண்ட் இல்லாதது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும், எப்படியோ வெற்றி பெற்று விமர்சனங்களிலிருந்து தப்பினார் கேப்டன் ரோஹித் சர்மா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asia cup cricket, Dinesh Karthik, Gautam Gambhir, Rishabh pant, Rohit sharma