Home /News /sports /

முன்னாள் ராணுவ வீரருக்கு உதவிய கம்பீர்: கிரிக்கெட் ரசிகர்கள் சல்யூட்!

முன்னாள் ராணுவ வீரருக்கு உதவிய கம்பீர்: கிரிக்கெட் ரசிகர்கள் சல்யூட்!

கவுதம் கம்பீர், பீதாம்பரன்,

கவுதம் கம்பீர், பீதாம்பரன்,

#GautamGambhir Helps to #ArmyVeteran in Delhi | பீதாம்பரனின் நிலையைக் கண்டு வருந்திய கவுதம் கம்பீர், அவரை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

  • News18
  • Last Updated :
    டெல்லியில் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த முன்னாள் ராணுவ வீரருக்கு, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ட்விட்டர் மூலம் உதவி செய்துள்ளார்.

    டெல்லியில் உள்ள கன்னாட் பகுதியில், அரசு அலுவலகம் ஒன்றின் வளாகத்தில் கையில் ஒரு பதாகையுடன் பீதாம்பரன் என்ற முன்னாள் ராணுவ வீரர் உதவி கேட்டு வந்துள்ளார். அந்த பதாகையில், “1965,  1971 காலகட்டத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளேன். அண்மையில் எனக்கு  விபத்து ஏற்பட்டது. மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. உங்கள் உதவி தேவை” என்று எழுதப்பட்டிருந்தது.

    Ex Army Peethambaran, முன்னாள் ராணுவ வீரர் பீதாம்பரன்
    முன்னாள் ராணுவ வீரர் பீதாம்பரன்.


    பீதாம்பரனின் நிலையைக் கண்டு வருந்திய கவுதம் கம்பீர், அவரை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

    கவுதம் கம்பீரின் ட்வீட்டைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சகம், உடனே பதில் அனுப்பியுள்ளது. அதில், “ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது நீங்கள் காட்டிய அக்கறையை வரவேற்கிறோம். நீங்கள் எழுப்பிய கவலைகள் தீர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம்” பதிலளிக்கப்பட்டது.



    பின்னர், அதற்கு நன்றி தெரிவித்த கம்பீர், “பீதாம்பரனுக்கு இந்திய ராணுவம் உதவி செய்வதாக கூறியதற்கு நன்றி, அவரின் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அமைப்பு உதவி செய்ய இருக்கிறது. உடனே பதில் அளித்ததற்கு நன்றி” என கூறியிருந்தார்.

    கம்பீரின் மனிதநேயத்தை கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

    #NZvIND: வைரலாகும் தோனியின் அசத்தல் ரன் அவுட் வீடியோ!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Army man, Gautam Gambhir

    அடுத்த செய்தி