2011 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடிக்காமல் போனதற்கு தோனி தான் காரணம் என்று கவுதம் கம்பீர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதற்கு கவுதம் கம்பீர் முக்கிய வீரராக இருந்தார். இறுதிப் போட்டியில் 97 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். கம்பீர் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டாலும் அவருடைய சிறப்பான ஆட்டம் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
கவுதம் கம்பீர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது பாஜக எம்.பியாக உள்ளார்.அவரிடம் நேர்காணல் ஒன்றில் இறுதி போட்டியில் சதம் அடிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் பதிலளித்த கம்பீர், “இந்த கேள்வி பலமுறை என்னிடம் கேட்கப்பட்டுள்ளது. நான் 97 ரன்கள் எடுக்கும் வரை எனது தனிப்பட்ட ரன் குறித்து சிந்திக்கவில்லை.
இலங்கை நிர்ணயத்த இலக்கை நோக்கி கொண்டுதான் சென்றேன். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. ஒரு ஓவர் முடிந்தவுடன் நானும் தோனியும் களத்தில் இருந்தோம்.அப்போது தோனி என்னிடம் இன்னும் 3 ரன்கள் தான் உள்ளது. அதை எடுத்தால் நீ சதம் அடிப்பாய் என்றார்.
அதுவரை இலக்கை நோக்கி நோக்கி சென்ற நான் 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. இதுபோன்ற மனநிலை ஏற்பட்டால் தவறான முடிவுக்கு வருவோம். நம்முடைய கவனம் சிதறாமல் இருப்பது முக்கியம். நான் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறும் போது இந்த 3 ரன்கள் என் வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் என நினைத்தேன். அது சரிதான்“ என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.