எங்களுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும் - தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து

அணியில் தோனிக்கான இடம் அவரின் பார்மின் அடிப்படையிலேயே இருக்கும்.

news18
Updated: July 19, 2019, 9:44 AM IST
எங்களுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும் - தோனி ஓய்வு குறித்து கம்பீர் கருத்து
கம்பீர் | தோனி
news18
Updated: July 19, 2019, 9:44 AM IST
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துகள் எழுந்துவரும் நிலையில், முன்னாள் இந்திய அணி வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தனது மனதில் உள்ள கருத்தை கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக அவர் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவர் மற்ற வீரர்களைப் போல சமீபத்திய பார்ம் அடிப்படையில் அணியில் இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.


Also Read: தோனியை கடைசியில் இறக்கியது தவறு... இன்னொரு சூப்பர் ஓவர்...! சச்சின் டெண்டுல்கர் கருத்து

“இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் ” என்று செய்திகள் கூறுகின்றன.

தோனி தற்போதைய நிலையிலேயே ஓய்வு பெற வேண்டும் என்றும், இல்லை அவர் இன்னும் சிறிது காலம் அணிக்கு பங்களிப்பு அளிக்கலாம் என்றும் கலவையான கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இந்த சூழலில், தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக கூறியிருந்தார்.

Loading...

Also Read: சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

2022-ம் ஆண்டு வரை வணிக ரீதியான ஒப்பந்தங்களில் தோனி கையெழுத்திட்டு இருப்பதால், அதுவரை அவர் ஓய்வு பெறும் திட்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எப்படியோ, இனி அணியில் தோனிக்கான இடம் அவரின் பார்மின் அடிப்படையிலேயே இருக்கும்.

இந்நிலையில், தோனி ஓய்வு பற்றி கவுதம் கூறுகையில், எதிர்காலத்தை கருத்தில் கொள்வது முக்கியம், தோனி கேப்டனாக இருந்த போது எதிகாலம் பற்றி யோசித்தார். ஆஸ்திரேலியாவில் தோனி கூறியது நினைவில் உள்ளது.

அதாவது நான், சச்சின், சேவாக், ஆகியோர் காமென்வெல்த் தொடரில் விளையாட முடியாது. அங்குள்ள மைதானங்கள் பெரியது என்பதால், இளம் வீரர்களே சரியாக இருப்பார்கள் என்று கூறினார். ஆகவே, நடைமுறைக்கு பயனளிக்கும் முடிவுகளை எடுக்க வேண்டுமே தவிர இங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Also See...

பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்!தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...