விஜய், அஜித்துக்கு மட்டும்தான் நடக்குமா...? அதிர வைத்த கிரிக்கெட் வீரர்!

#GautamGambhir Name Top #Trending on Twitter | கவுதம் கம்பீர், இன்று பாஜகவில் இணைந்தார்.

விஜய், அஜித்துக்கு மட்டும்தான் நடக்குமா...? அதிர வைத்த கிரிக்கெட் வீரர்!
கவுதம் கம்பீர். (PTI)
  • News18
  • Last Updated: March 22, 2019, 4:13 PM IST
  • Share this:
கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், பாஜகவில் இன்று இணைந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

பொதுவாக, சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப இணையத்தில் டிரெண்டிங்கில் வரும். தமிழகம் சார்ந்த விஷயங்கள் அறிவிக்கப்பட்டால், தமிழக அளவிலும், இந்தியா சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும்போது டிரெண்டிங்கில் வரும்.

பிரபல டிரெண்டிங்:


அரசியல் தலைவர்கள், சினிமா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்போது ட்விட்டரில் டிரெண்டிங்கில் வருவதை நாம் பார்த்திருப்போம். உதாரணமாக, விஜய், அஜித் படம் குறித்து சின்ன விஷயமாக இருந்தாலும் கூட ட்விட்டரில் டிரெண்டாக்கி ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாக நடந்துவருகிறது.

கவுதம் கம்பீர்:

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல ஆண்டுகளாக விளையாடாத இந்திய வீரர் கவுதம் கம்பீர், அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர், நடப்பு ஆண்டுக்கான சீசனில் ஏலத்தில் எடுக்கப்படாமல் தொடரில் இருந்தே வெளியேறினார்.கம்பீரின் 2-வது இன்னிங்ஸ் அரசியல் களம்:

கவுதம் கம்பீரை யாரும் சீண்டாத நிலையில், தனது 2-வது இன்னிங்சை விளையாட ஆரம்பத்துள்ளார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். இதன்மூலம், டெல்லியில் மக்களவை வேட்பாளராக கம்பீர் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.உலக அளவில் டிரெண்டான கம்பீர்:

பாஜகவில் கவுதம் கம்பீர் இணைந்த உடன் உலக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் 2-வது இடத்தில் அவரது பெயர் இருந்தார். அதேபோல், இந்திய அளவில் முதல் இடத்தில் டிரெண்டிங் ஆனது. அரசியல் களத்தை மட்டுமல்லமால் விஜய், அஜித் போன்ற சினிமா பிரபலங்களைத் தாண்டி ட்விட்டரையும் அதிர வைத்துவிட்டார் கவுதம் கம்பீர்.

பாஜகவில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர்!

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பமாட்டோம் - பாகிஸ்தான் அமைச்சர்

உலக அளவில் டிரெண்டான #MSDhoniRoars.. ட்விட்டரை அதிர வைத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!

Also Watch...

First published: March 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading