அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!

#GautamGambhir invites #ShahidAfridi for psycho analysis in India | கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை இருக்கிறது, எந்தவிதமான அவருக்கு எந்தவிதமான சாதனையும் கிடையாது என அப்ரிடி விமர்சித்திருந்தார்.

அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!
கவுதம் கம்பீர் - ஷகித் அப்ரிடி.
  • News18
  • Last Updated: May 4, 2019, 4:00 PM IST
  • Share this:
அப்ரிடி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார், இந்தியா வந்து மனநல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று செல்லட்டும் என கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஷகித் அப்ரிடி, ‘கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், “37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல. நான் 1975-ம் ஆண்டுதான் பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதிவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


Game Changer Shahid Afridi
ஷகித் அப்ரிடி சுயசரிதை புத்தகம்.


இதுதவிர, அவரது சுயசரிதை புத்தகத்தில், “கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்னை இருக்கிறது. எந்தவிதமான அவருக்கு எந்தவிதமான சாதனையும் கிடையாது. அவர் மனதில் டான் பிராட்மேன், ஜேம்ஸ்பாண்ட் போல திமிராக நடந்துகொள்வார்” என அப்ரிடி கூறியுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கம்பீர், “அப்டிரி, நீங்கள் ஒரு கோமாளி. நாங்கள் இன்னும் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ சுற்றுலா விசாக்களை வழங்குகிறோம். நான் உங்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.


உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading