இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் வீரர்கள் மட்டும் பிசிசிஐயை பல்வேறு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் தொடரையும் விமர்சித்து வந்த நிலையில், இது குறித்து இந்திய முன்னள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.
அதில், ‘இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும்போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள். ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது என கூறியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது மிக சிறந்த மாற்றம் என கூறிய கம்பீர் இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புவதாக தெரிவித்தார். வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்றும் விளையாட்டில் உணர்வு அவர்களிடம் கலந்திருக்காது என்றும் இந்திய பயிற்சியாளர்கள் உணர்வுப்பூர்வமாக அணியை நேசிப்பார்கள் என கூறினார்.
இதையும் படிங்க: WATCH - பாண்டியா பிரதர்ஸ் உடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட தோனி: வைரல் வீடியோ!
லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என தான் நினைப்பதாகவும், பிக்பாஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள் என கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. பிசிசிஐ தனது 50 சதவீத வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட்டுக்கு 50 சதவீத வருமானம் போதும் என கருத்து கூறிய கம்பீர் மற்ற விளையாட்டுக்கு 50 சதவீத வருமானத்தை ஒதுக்கலாம் என பிசிசிஐக்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் யோசனை கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Gautam Gambhir, IPL