கவுதம் காம்பீர் அப்படிப்பட்டவர் இல்லை... ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆதரவு!

'#GautamGambhir can never talk ill of any woman', #HarbhajanSingh backs former teammate in #AAP row | நான் 'மாட்டு இறைச்சி உண்பேன்', 'பாலியல் தொழிலாளி' என்றெல்லாம் காம்பீர் விமர்சித்துள்ளதாக பெண் வேட்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கவுதம் காம்பீர் அப்படிப்பட்டவர் இல்லை... ஹர்பஜன் சிங், விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆதரவு!
கவுதம் காம்பீர் - ஹர்பஜன் சிங்.
  • News18
  • Last Updated: May 10, 2019, 3:55 PM IST
  • Share this:
பெண் வேட்பாளரை மோசமாக விமர்ச்சித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் கவுதம் காம்பீருக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் காம்பீர் அண்மையில் பா.ஜ.கவில் இணைந்ததுடன், டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட சீட்டும் வாங்கினார். காம்பீருக்கு போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிஷி, கவுதம் காம்பீர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மக்களிடம் எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது போல், தன்னை கொச்சையான வார்த்தைகளால் விமர்சித்து லட்சக்கணக்கான துண்டு பிரசுரங்களை விநியோகித்து உள்ளதாகக் கூறினார். அதில், நான் 'மாட்டு இறைச்சி உண்பேன்', 'பாலியல் தொழிலாளி' என்றெல்லாம் விமர்சித்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்தப் புகாருக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காம்பீர் தரம் தாழ்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார் என்று கற்பனையில் கூட நினைத்தது இல்லை என அவர் கூறியிருந்தார்.இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள காம்பீர், “இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் எனது வேட்புமனுவை இப்போதே வாபஸ் பெறுகிறேன்” என்று சவால்விட்டார்.

இந்நிலையில், மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகியோர் காம்பீருக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். அதில், காம்பீருடன் நெருங்கி பழகியுள்ளதாகவும், அவர் பெண்களிடம் அப்படி நடந்துகொள்ளமாட்டார் எனவும் கூறியுள்ளனர்.

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்... குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தேர்வாக வாய்ப்பு!

ஆஸி. வீரர்களை மோசமாக விமர்சித்த இங்கிலாந்து ரசிகர்கள்... வைரலாகும் ட்வீட்கள்!

2012 ஐ.பி.எல் வரலாறு மீண்டும் திரும்புமா? இன்று டெல்லியை எதிர்கொள்ளும் சி.எஸ்.கே!

நோன்பு இருந்தபோதும் விளையாடிய ஐ.பி.எல் வீரர்கள்... சீக்ரெட் உடைத்த ஷிகர் தவான்!

#IPLQualifier2: வேட்டைக்குத் தயாராகும் கர்ஜிக்கும் சிங்கங்கள்!

VIDEO | ரிஷப் பண்ட் காட்டடியால் கதறி அழுத ஹைதராபாத் பயிற்சியாளர்!

VIDEO | அதிசய முறையில் அவுட்டான டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா!

இரண்டே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த ஐ.பி.எல் பைனல் டிக்கெட்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading