• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்

ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

  • Share this:
    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப்பயிற்சியாளராக ராகுல் திராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் பேசுகையில், "இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். தற்போது அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன்.

    அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். ஓய்வறையில் ராகுல் திராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும். அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார் அவர் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடியுள்ளார்.

    அவர் இந்திய அணியை கேப்டன்சி செய்துள்ளார், அவரது பணி ஒழுங்கு, கட்டுக்கோப்பு என்பது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். எனவே அவர் நிறைய உத்திகள், கிரிக்கெட் நுணுக்கங்கள், ஸ்பிரிட், என்று பல விஷயங்களை அணிக்கு தாரைவார்த்தளிப்பார்” என்றார் கவுதம் கம்பீர்.

    ஆகாஷ் சோப்ரா, ராகுல் திராவிட் பற்றி கூறிய போது, “ராகுல் திராவிட் பற்றி யோசிக்கும் போது முதலில் நம் எண்ணத்துக்கு வருவது புரோசஸ் என்பதே. திட்டமிடுதல் செயல்படுத்தல் போன்றவை திராவிடின் பலம். சிறு சிறு யுத்தங்களை அவர் தோற்பதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் போரை வென்றாக வேண்டும், இதுதான் திராவிட். எனவே போரை வெல்லும் இந்த மனநிலை அணிக்குள் ஏற்படும். அதோடு நிலைத்தன்மையோடு அணி திடமாக இருக்கவும் உதவுவார்” என்றார்.

    சுனில் கவாஸ்கர் திராவிட் பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் பேட் செய்யும் போது, அவர் கிரீசில் இருக்கும் வரை இந்திய அணி பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் பிறக்கும். அதே போல் புதிய பயிற்சியாளர் பொறுப்பையும் அவர் தன் பேட்டிங்கில் காட்டிய அதே பொறுப்புடன் சுலபமாகக் கையாள்வார் என்றே நினைக்கிறேன்.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரது அமைதி, பொறுமையைப் பார்த்தோமானால் ராகுல் திராவிட் போலத்தான் கொஞ்சம் அமைதியானவர்களே. எனவே இவர்களிடையே பிணைப்பும் புரிதலும் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: