• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கேரி கர்ஸ்டன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆகிறார்? - இந்திய அணி போல் உச்சம் செல்ல விருப்பம்

கேரி கர்ஸ்டன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆகிறார்? - இந்திய அணி போல் உச்சம் செல்ல விருப்பம்

கேரி கர்ஸ்டன்

கேரி கர்ஸ்டன்

  • Share this:
    ஒரு காலத்தில் கால்பந்தில்தான் பயிற்சியாளர் முக்கியத்துவம் பெறுவார்கள், கிரிக்கெட்டில் கேப்டன்கள் தான். ஆனால் டி20 என்ற வர்த்தக வடிவம் உள் நுழைந்த பிறகே பயிற்சியாளர்களுக்கான கிராக்கி அதிகரித்து வருகிறது, குறிப்பாக வெளிநாட்டு கோச் என்றால் விசேஷம். இந்நிலையில்தான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக கேரி கர்ஸ்டன் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கேரி கர்ஸ்டன் இந்திய அணியை உச்சத்துக்கு இட்டுச் சென்றார், 2011 உலகக்கோப்பையை இந்திய அணி இவரது பயிற்சிக்காலத்தில் தான் வென்றது, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் 1 இடத்தை பிடித்தது. மேலும் இவரது பயிற்சியின் கீழ் தோனி தலைமையின் கீழ் ஏகப்பட்ட இருதரப்பு ஒருநாள் தொடர்களை இந்தியா வென்றதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கர்ஸ்டன் நியமிக்கப்படவிருக்கிறார், போட்டியில் சைமன் கேட்டிச், பீட்டர் மூர்ஸ் ஆகியோரும் உள்ளனர். இந்திய அணியை 2008 முதல் 2011 வரை பயிற்சியில் வழிநடத்தினார் கேரி கர்ஸ்டன். பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைக்காக பேட்டிங் ஆலோசகராக மேத்யூ ஹெய்டனையும், பவுலிங் பயிற்சியாளராக மேட் பிலாண்டரையும் நியமித்ததன் பலன் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே தெரிந்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா, அயல்நாட்டு பயிற்சியாளர்தான் சரி என்று நினைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேரி கர்ஸ்டன் தென் ஆப்பிரிக்கா, ஹோபார்ட் ஹரிகேன்ஸ், ஆர்சிபி அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

    Also Read: T20 WC 2021: கோலியே இப்படி பேசினா அப்புறம் எங்கேருந்து ஜெயிக்கிறது?- ஜடேஜா அதிருப்தி

    முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் கேடிச் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக ஐபிஎல் 2021 முதல் சுற்று வரை இருந்தார், இரண்டாம் யுஏஇ சுற்றுக்கு அவர் வரவில்லை. கேரி கர்ஸ்டன் நியமிக்கப்பட்டால் முதல் அசைன்மெண்ட்டே கடினமான குழிப்பிட்ச் தாதாக்களான வங்கதேசத்துடன் ஆட வேண்டும், அவர்கள் நாகின் டான்சைத் தடுக்க வேண்டும்.

    Also Read: ஹர்திக் பாண்டியாவை விட மாட்டாங்க போல-நியூசிலாந்துக்கு எதிராக இந்திய லெவன் எப்படி இருக்க வேண்டும்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: