Home /News /sports /

கோலியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காத கங்குலி- பிசிசிஐ-க்கு தேவை வெளிப்படைத்தன்மை

கோலியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காத கங்குலி- பிசிசிஐ-க்கு தேவை வெளிப்படைத்தன்மை

கோலி

கோலி

ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து முன்னறிவிப்பின்றி தான் நீக்க்கப்பட்டதாகவும் கங்குலி கூறியது போல் யாரும் என்னிடம் வந்து டி20 கேப்டன்சியை விட்டு போக வேண்டாம் என்று கூறவும் இல்லை என்று விராட் கோலி கூறியதன் மூலம் பிசிசிஐ-யின் செயல்பாட்டிலும் கங்குலியின் செயல்பாட்டிலும் உள்ள வெளிப்படைத்தன்மை  சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இதில் யார் கூறுவது உண்மை யார் கூறுவது உண்மையில்லை என்பதை நாம் கண்டுப்பிடிக்க முடியாது, இருதரப்பிலும் வெளிப்படைத் தன்மை தேவை. குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வெளிப்படைத்தன்மை மிக மிக முக்கியமாகத் தேவை. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போது இந்த கோலி, ரோகித் சர்மா பகைமையை வளர்த்து விட்டாரா, தூபம் போட்டாரா? அல்லது அவர்கண்டு கொள்ளாமல் விட்டாரா என்பதும் தெரியவில்லை.

தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் போட்டி இல்லை, பொறாமை இல்லை, நட்புதான் என்று கோலி கூறிவிட்டார், பின் எங்கிருந்து வருகிறது கோலி மீதான திடீர் பிரஷர்?இந்நிலையில் கோலி நீங்கள் எதுவும் தன்னிடம் பேசவில்லை, டி20 கேப்டன்சியை உதற வேண்டாம் என்று யாரும் என்னிடம் பேசவும் இல்லை, கூறவும் இல்லை என்று கோலி கூறியுள்ளாரே என்று கங்குலியிடம் கேட்டதற்கு, “கோலியின் பேட்டி தொடர்பாக எந்த கருத்தும் கூற முடியாது எனவும் இது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கேப்டன்ஷிப் குறித்த விராட் கோலியின் கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துவிட்டார். அதை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டு விடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மட்டுமே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழ்ந்ததில்லை, கேப்டனும் வாரியத்தலைவரும் மோதிக்கொள்வது பாகிஸ்தான் கிரிக்கெட்டில்தான் நடக்கும் இப்போது இங்கும் அது தலைக் காட்டத் தொடங்கியுள்ளது.

Also Read: கோலி-ரோகித் இடையே என்ன பிரச்சனை?- அசாருதீன் சொல்லலாமே’

மீண்டும் இதை பிசிசிஐ-யிடம் விட்டு விடுங்கள் என்று கங்குலி கூறியிருப்பது மீண்டும் வெளிப்படைத்தன்மையை மறுப்பதான செயல்தான். பிசிசிஐ-க்கு ஏன் இத்தனை அதிகாரம்? அதை வழிநடத்துவது யார்? பிசிசிஐ-யை சேர்ந்தவர்கள்தானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

Also Read: கோலி இனி அபாயகரமானவராக இருப்பார்- கவுதம் கம்பீர் கணிப்பு


ரோகித் சர்மா-கோலி -இந்நிலையில் நியூஸ் 18 சேனலுக்கு பிசிசிஐ தரப்பில் ஒருவர் கூறும்போது, “தென் ஆப்பிரிக்கா தொடர் முடியும் வரை விராட் கோலி பேட்டி தொடர்பாக அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று, அதாவது வியாழனன்று பிசிசிஐ தலைவர் கங்குலி, அருண் துமால், ஜெய் ஷா ஆகியோர் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல் மேற்கொண்டனர், இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது” என்று கூறினார்.

பொதுவாக இருக்கும் நடைமுறை என்னவெனில் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தி இருக்கும் ஒரு வீரர், கேப்டன் தன்னை கட்டுப்படுத்தும் வாரியத்தை குறித்து எதிர்மறையாகக் கருத்து தெரிவிக்கக் கூடாது. ஆனால் கேள்விக்குத்தான் கோலி பதிலளித்தாரே தவிர அவர் அறிக்கை ஒன்றும் விடவில்லை என்பதும் இங்கு கோலிக்குச் சாதகமாகவே உள்ளது.

மூன்று விவகாரங்களில் சமத்காரமாக பதில் அளித்த விராட் கோலி:

முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தான் விலகுவதாக வந்த வதந்திகள் விஷயத்திலும், பிறகு அணித்தேர்வுக்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக தன்னிடம் ஒருநாள் கேப்டன்சியிலிருந்து தன்னை நீக்கியது தொடர்பாகவும் கடைசியில் டி20 கேப்டனாக என்னை நீடிக்க கங்குலி கேட்டதாகக் கூறியதை மறுக்கும் போதும் ஒரு தேர்ந்த ராஜீயவாதி போல் விராட் கோலி விஷயங்களைத் தெள்ளத் தெளிவாகப் புட்டுப் புட்டு வைத்தார்.

இதில் எதிலும் அவர் தன்னை கேப்டன்சியை விட்டு நீக்கியது தொடர்பாக கசப்பையோ அதிருப்தியையோ வெளியிடவில்லை. தன்னால் இந்த முடிவை புரிந்து கொள்ள முடிகிறது என்றே கோலி கூறினார்.

இப்போதைக்கு இருதரப்புக்கும் இடையேயான இந்த முறிவு சுமுகமாக முடியும் என்று தெரியவில்லை. பிரச்சனை இதையெல்லாம் தாண்டியது என்று சில தரப்புகள் கூறுகின்றன. ஆனால் கிரிக்கெட் பண்டிதர்கள் கூறுவதென்னவெனில் இதில் போய் யாருக்கு வெற்றி என்று ஈகோவாகப் பார்க்காமல் பிரச்சனையி ‘ட்ரா’ செய்தால் இந்திய கிரிக்கெட் வெற்றி பெறும் என்று கூறுகின்றனர்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, Sourav Ganguly

அடுத்த செய்தி