• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கங்குலிக்கு இதயத்தில் 3 அடைப்புகள், சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருக்கிறார்- டாக்டர்கள் விளக்கம்; நலம் விசாரித்த பிரதமர் மோடி

கங்குலிக்கு இதயத்தில் 3 அடைப்புகள், சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருக்கிறார்- டாக்டர்கள் விளக்கம்; நலம் விசாரித்த பிரதமர் மோடி

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

பிரதமர் மோடி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் நலம் விசாரித்தார்.

  • Share this:
    கங்குலியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததாகவும் அவை ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் சரி செய்யப்பட்டதாகவும், இப்போது அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் நலம் விசாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    48 வயதாகும் சவுரவ் கங்குலிக்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' எனப்படும், இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கங்குலியின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கூறும்போது, “உடல் நிலை சீராக உள்ளது. அவர் சுய நினைவுடன் இருக்கிறார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பாக உள்ளது. அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட வேண்டுமா என்பது பற்றி, ஆலோசித்து வருகிறோம்.

    நாட்டில் உள்ள சிறந்த மருத்துவ நிபுணர்களை ஆலோசித்து வருகிறோம். கங்குலி குடும்பத்தினரும் நிபுணர்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி மேல் சிகிச்சை அளிக்க சம்மதம் தெரிவித்தனர்.

    கங்குலிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவர் உடல்நிலையை தீவிரமாக கவனித்து வருகின்றனர். அவ்வப்போது அவருக்கு தேவையானதைச் செய்கின்றனர், அவர் உடல் நிலை சீராக உள்ளது” என்று மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி கங்குலியிடம் உடல்நலனை கேட்டறிந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: