• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ட்ராவிட்டைத் தொடர்ந்து வி.வி.எஸ்.லெட்சுமணனுக்கு முக்கியப் பொறுப்பு - உறுதி செய்த கங்குலி

ட்ராவிட்டைத் தொடர்ந்து வி.வி.எஸ்.லெட்சுமணனுக்கு முக்கியப் பொறுப்பு - உறுதி செய்த கங்குலி

விவிஎஸ்லெட்சுமணன்

விவிஎஸ்லெட்சுமணன்

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை பி.சி.சி.ஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.

  • Share this:
    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இயங்கிவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை கையாண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருந்தார்.

    ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் கங்குலி இன்று உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக சவுரவ் கங்குலியை ஏ.என்.ஐ தொடர்பு கொண்ட நிலையில், வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை கங்குலி உறுதி செய்துள்ளார்.

    ஏற்கெனவே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் காலத்தில் முக்கிய வீரராக இருந்த லெட்சுமணனுக்கு கிரிக்கெட் அகாடமியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: