ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

திராவிட் திட்டம் தெளிவு- டி20 உலகக்கோப்பை அணி தயார்? உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் காத்திருப்பு நீளும்

திராவிட் திட்டம் தெளிவு- டி20 உலகக்கோப்பை அணி தயார்? உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் காத்திருப்பு நீளும்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

உம்ரன் மாலிக் தன் உழைப்பால் உயர்ந்து அதிவேக பவுலராக இருக்கிறார், அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் கிரிக்கெட் தான் செலக்‌ஷனின் அளவுகோல் என்றான பிறகு பிரமாதமாக டெத் ஓவர்களையும் மிடில் ஓவர்களையும் வீசுகிறார், ஆனால் இவர்கள் காத்திருப்பு நீண்டதாக அமையும் என்றே தெரிகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய அணியில் மும்பை லாபி, சென்னை லாபி, பெங்களூரு லாபி ஆகியவற்றுடன் தனிநபர் லாபிகளும் இல்லாமல் இடம்பிடிப்பது மிக மிக கடினம் என்பது அந்தக்காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு நடைமுறை. உம்ரன் மாலிக் தன் உழைப்பால் உயர்ந்து அதிவேக பவுலராக இருக்கிறார், அர்ஷ்தீப் சிங், ஐபிஎல் கிரிக்கெட் தான் செலக்‌ஷனின் அளவுகோல் என்றான பிறகு பிரமாதமாக டெத் ஓவர்களையும் மிடில் ஓவர்களையும் வீசுகிறார், ஆனால் இவர்கள் காத்திருப்பு நீண்டதாக அமையும் என்றே தெரிகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் படுமோசமாகத் தோற்றும் 3வது போட்டியில் அணியை திராவிட் மாற்றவில்லை. ஏதாவது ஒரு டவுனில் பரிசோதனை செய்து அனைவருக்கும் வாய்ப்பளித்து சுழற்சி தத்துவத்தைக் கடைப்பிடித்தால் யார் யார் எந்த தரத்தில் இருக்கிறார்கள் என்பதை புதிய வீரர்களைப் பொறுத்து தரம் பிரித்துப் பார்க்க முடியும்.

கிரெக் சாப்பல் பயிற்சி காலத்தில் திராவிட் கேப்டன் காலத்தில் இத்தகைய பரிசோதனை முறை 3ம் நிலையில் மேற்கொள்ளப்பட்டது. சுழற்சி முறையில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, பவுலிங்கிலும் அப்படித்தான். ஆனால் திராவிட் அந்த மாடலை இப்போது கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது, முடிவெடுப்பதில் விராட் கோலி போன்று அபத்தமாக போட்டிக்கு போட்டி தேவையற்ற மாற்றங்களைச் செய்யாவிட்டாலும் தேவையான மாற்றங்களை பரிசோதனை அடிப்படையில் பேட்டிங்கில் ஏதாவது ஒருடவுனிலும் பந்துவீச்சில் ஒரு இடம் சுழற்சி முறைக்கும் ஆட்படுத்தப்படுவதுதான் அனைவருக்குமான சம வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

இப்போது புவனேஷ்வர் குமார் நல்ல தேறிய அனுபவஸ்தராகி விட்டார், எனவே அவர் இடத்தில் ஒன்றிரண்டு போட்டிகளில் உம்ரன் மாலிக்கிற்கோ அர்ஷ்தீப் சிங்கிற்கோ, பிரசித் கிருஷ்ணாவுக்கோ வாய்ப்பை வழங்க வேண்டும்.

இப்போதே ரிஷப் பண்ட் இடத்தில் மாறி மாறி சோதனை செய்து பார்த்து அதில் தேறுபவர்தான் டி20 உலகக்கோப்பைக்கு என்று முடிவெடுக்க வேண்டும் ஆனால் அணியை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு நிலையான அணியை திராவிட் உருவாக்குகிறார் என்று சவுரவ் கங்குலியே கூறியுள்ளார்.

கங்குலி டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில், “ராகுல் திராவிட் நன்கு செட்டில் ஆன வீரர்களுடன் ஆட விரும்புகிறார். அடுத்த மாத இங்கிலாந்து தொடரிலிருந்து ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகப்போகும் வீரர்களுடன் தான் இந்திய அணி ஆடப்போகிறது” என்றார்.

இதிலிருந்து தெரிவதென்ன, உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங்கை பரிசோதனை செய்யாமலேயே செட்டில்டு அணியை உருவாக்கப்பார்க்கிறார் திராவிட் என்பதுதானே. இப்படிச் செய்தால் உலகக்கோப்பை டி20-யில் நாமெல்லோரும், ஏன் உலகமே எதிர்நோக்கும் அதிவேக பவுலர் உம்ரன் மாலிக்கை பார்க்க முடியாது, அவரது காத்திருப்பு நீண்டதாகவே இருக்கும். இது இப்படித்தானா, அல்லது அவர் உலகக்கோப்பை டி20-யில் இடம்பெறுவாரா என்பது திராவிட் கையில் தான் உள்ளது.

First published:

Tags: Rahul Dravid, Sourav Ganguly, T20 World Cup