Ganguly | நான் பிரதமராகி இருந்தால்... சவுரவ் கங்குலி கூறிய தருணம்

கங்குலி-திராவிட்

ஜூலை 8, இன்று பிறந்த நாள் காணும் தாதா சவுரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை எடுத்தவர் என்றாலும் அவரிடம் நல்ல பவுலிங் திறமைகள் இருந்தன. ஆனால் அதை அவர் சீரான முறையில் பயன்படுத்தவில்லை, எப்போதாவது தேவைப்பட்டால் வீசுவார் என்றுதான் கரியர் முழுதும் இருந்தார்.

  • Share this:
    இன்று கங்குலி தன் 49வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் மேட்ச் பிக்சிங், படுதோல்விகள் என்று நெருக்கடியில் இருந்த போது கேப்டன்சி பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி பல மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுத் தந்ததோடு ஒரு வலுவான அணியை உருவாக்கக் காரணமாக இருந்தார். கங்குலி இல்லையெனில் சேவாக் என்ற அற்புதனை நாம் பார்த்திருக்க முடியாது.

    அவரை தொடக்க வீரராகக்களமிறக்கி இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்பு முனை ஏற்படுத்தினார் கங்குலி. யுவராஜ் சிங்கையும் அப்படி முயற்சி செய்தார், ஆனால் சென்னையில் அந்த டெஸ்ட் போட்டியில் இவரும் சேவாகும் இறங்க 5ம் நாள் ஆட்டம் மழையினால் முற்றிலும் கைவிடப்பட்டது, இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவுக்குஎதிராக தேவைப்பட்ட 221 ரன்களை எடுக்க அன்று யுவராஜ் ஒரு இன்னிங்ஸை ஆடியிருந்தால் அவரது டெஸ்ட் வாழ்க்கையே மாறியிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டம் மழை வந்து கங்குலியின் அந்த சீரிய முயற்சியில் மண் விழுந்தது.

    யுவராஜ் சிங், கைஃப், ஹர்பஜன், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, இர்பான் பத்தான் என்று வரிசையாக ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தார். இவரது கேப்டன்சியில் 49 போட்டிகளில் 21 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இவரும் ராகுல் திராவிடும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்ர். இருவரும் ஓய்வு பெற்றாலும் நட்பு ஓய்வதில்லை. இப்போது கங்குலி பிசிசிஐ தலைவர், ராகுல் திராவிட் இந்திய ஜூனியர், ஏ அணியின் பயிற்சியாளர்.

    Also Read: Happy Birthday Ganguly | இந்திய கிரிக்கெட்டின் ‘பாஸ்’ - தாதா கங்குலிக்கு இன்று பிறந்த நாள் - சுவாரசியப் படங்கள்

    கங்குலி பந்து வீச்சில் 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    இருவரும் சேர்ந்து இங்கிலாந்து தொடரில் ஒருமுறை வர்ணனை மேற்கொண்டனர். அது 2014-ல் இந்திய அணி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட போது நடந்த உரையாடல்.

    வர்ணனையில் இருவரும் பேசியது:

    ராகுல் திராவிட்: சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒரு நல்ல விஷயம் சொன்னார். கங்குலி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக வீசினால், இன்னும் கொஞ்சம் உடல் ஃபிட்டாக இருந்தால் அவர்தான் மேட்ச்-வின்னர்.

    இதற்கு கங்குலி கிண்டலுடனும் தன்னடக்கத்துடனும் நகைச்சுவையாக அளித்த பதிலில், “நான் இந்தியப் பிரதமராக இருந்திருந்தால்.. ஏகப்பட்ட விஷயங்களைச் செய்திருப்பேன்” என்று பதிலளித்தார்.
    Published by:Muthukumar
    First published: