Home » News » Sports » CRICKET GANGULY BEING GIVEN EXTREME PRESSURE TO JOIN POLITICS MARXISTS BLAME POLITICS BEHIND GANGULY S HEART ATTACK MUT

அரசியலில் சேர கங்குலிக்கு கடும் நெருக்கடி, அதனால்தான் மாரடைப்பு: மார்க்சிஸ்ட் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

கங்குலியை அரசியலில் சேரக் கூறி சிலர் அவருக்குக் கடும் மனஅழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.

அரசியலில் சேர கங்குலிக்கு கடும் நெருக்கடி, அதனால்தான் மாரடைப்பு: மார்க்சிஸ்ட் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு
சவுரவ் கங்குலி
  • Share this:
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும்நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பிசிசிஐயில் அமித் ஷா மகனுடன் தான் சவுரவ் கங்குலியும் நிர்வாகப் பணிகளைச் செய்து வருகிறார், இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன் மேற்கு வங்க ஆளுநர் தினகரைச் சந்தித்து கங்குலி பேசினார். இதனால் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, அவர் பாஜகவில் சேர்வார் எனத் தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த கங்குலி, அரசியலில் சேரும் திட்டம் ஏதும் இல்லை, எந்தக் கட்சியிலும் சேரவில்லை என்றார்.

இந்த நிலையில்தன சவுரவ் கங்குலிக்கு நெருக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அசோக் பட்டாச்சார்யா கங்குலியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பட்டாச்சாரியா கூறும்போது, “கங்குலியை அரசியலில் சேரக் கூறி சிலர் அவருக்குக் கடும் மனஅழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம். கங்குலி அரசியலில் ஈடுபடுபவர் அல்ல. கங்குலியை விளையாட்டு வீரராகத்தான் அனைவராலும் அறியப்பட வேண்டும்.கங்குலியை அரசியலில் சேரக் கூறி அழுத்தம் கொடுக்கக் கூடாது. கடந்த வாரம் கூட நான் அவரிடம் அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
First published: January 4, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories