Home /News /sports /

கங்குலி-மோர்கன் தலைமையில் இந்திய மகாராஜாஸ்-வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி மோதும் கிராண்ட் போட்டி- முழு அணி விவரம்

கங்குலி-மோர்கன் தலைமையில் இந்திய மகாராஜாஸ்-வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி மோதும் கிராண்ட் போட்டி- முழு அணி விவரம்

கங்குலி கேப்டன்- பிசிசிஐ படம்

கங்குலி கேப்டன்- பிசிசிஐ படம்

செப்டம்பர் 16ம் தேதி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய மகாராஜாஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியும் கொல்கத்தாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் வெள்ளோட்டமாக மோதுகின்றன. இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    செப்டம்பர் 16ம் தேதி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய மகாராஜாஸ் அணியும் இயன் மோர்கன் தலைமையிலான வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணியும்  கொல்கத்தாவில் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின் வெள்ளோட்டமாக மோதுகின்றன. இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

    அப்சல்யூட் லெஜண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் என்பதுதான் இந்த லெஜண்ட்ஸ் லீகை நடத்துகிறது, இதன் ஆணையர் ரவி சாஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய மகாராஜாஸ் அணியில் கங்குலி தலைமையில் சேவாக், கைஃப், பதான் சகோதரர்கள், ஹர்பஜன் சிங் ஆகியோர்களும் கைகோர்க்கின்றனர். இவர்கள் அனைவருமே கங்குலி கேப்டன்சியில் ஆடியவர்கள்.

    ஆறுதலான விஷயம் ஸ்ரீசாந்த் இதில் ஆடுகிறார். இவர் தடை நீக்கப்பட்ட பிறகு இவர் சர்வதேச கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்.

    லெஜண்ட்ஸ் லீகின் முதல் போட்டித் தொடர் இந்த ஆண்டு ஜனவரியில் ஓமானில் நடந்தது.மகாராஜாஸ், ஜெயண்ட்ஸ், ஆசியா லயன்ஸ் ஆகிய அணிகள் மோதின. லயன்ஸுக்கு எதிரான ஹை ஸ்கோரிங் மேட்சில் உலக ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
    இந்த முறை 4 அணிகள் மோதுகின்றன. மொத்தம் 15 போட்டிகள்.

    செப்டம்பர் 16ம் தேதி மோதும் இந்திய மகாராஜஸ் அணி: கங்குலி (கேப்டன்), சேவாக், மொகமட் கைஃப், யூசுப் பத்தான், எஸ்.பத்ரிநாத், இர்பான் பதான், பார்த்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா, அசோக் டிண்டா, பிராக்யன் ஓஜா, அஜய் ஜடேஜா, ஆர்.பி.சிங், ஜொஹிந்தர் சர்மா, ரிதீந்தர் சிங் சோதி.

    வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் அணி: மோர்கன் (கேப்டன்), லெண்டில் சிம்மன்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ஜாக் காலிஸ், சனத் ஜெயசூரியா, மேட் பிரையர், நேதன் மெக்கல்லம்,ஜாண்ட்டி ரோட்ஸ், முரளிதரன்,  டேல் ஸ்டெய்ன், ஹாமில்டன் மசகாட்சா, மஷ்ரபே மோர்டசா, அஸ்கர் ஆப்கான், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, கெவினோ பிரையன், தினேஷ் ராம்தின்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cricket, Sourav Ganguly, Virender sehwag

    அடுத்த செய்தி