ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இன்று கங்குலியின் 50வது பிறந்த நாள்: நட்பின் பூக்கள் - சச்சின் மலரும் நினைவுகள்

இன்று கங்குலியின் 50வது பிறந்த நாள்: நட்பின் பூக்கள் - சச்சின் மலரும் நினைவுகள்

கங்குலிக்கு வயது 50, சச்சின் வாழ்த்து- மலரும் நினைவுகள்

கங்குலிக்கு வயது 50, சச்சின் வாழ்த்து- மலரும் நினைவுகள்

இன்று தாதா சவுரவ் கங்குலியின் 50வது பிறந்த தினம், மாறா நட்பின் பயணத்தை மலரும் நினைவுகளாக சச்சின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடினமான சூதாட்ட ஊழல் காலக்கட்டத்தில் கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை சரிவிலிருந்து மீட்டவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இன்று 50வது பிறந்ததினம், அவரது பிறந்த தினம் தொடர்பாக சச்சின் டெண்டுல்கர், கங்குலியுடன் தான் ஆடிய மலரும் நினைவுகளை சச்சின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடினமான சூதாட்ட ஊழல் காலக்கட்டத்தில் கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை சரிவிலிருந்து மீட்டவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இன்று 50வது பிறந்ததினம், அவரது பிறந்த தினம் தொடர்பாக சச்சின் டெண்டுல்கர், கங்குலியுடன் தான் ஆடிய மலரும் நினைவுகளை சச்சின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கங்குலிக்கு வயது 50, சச்சின் வாழ்த்து- மலரும் நினைவுகள்

ஒருநாள் போட்டிகளில் ஒரு கட்டத்தில் தொடக்க வீரர்களாக சச்சினும், கங்குலியும் சாதனைகள் பல புரிந்துள்ளனர், இன்று வரை இந்த தொடக்கக் கூட்டணிதான் சாதனை ஒருநாள் கூட்டணியாக இருந்து வந்துள்ளது.மொத்தம் 26 சதக்கூட்டணி அமைத்தனர். இதில் தொடக்கத்தில் மட்டும் 21 சதக்கூட்டணி. இன்று பிறந்த தினம் காணும் சவுரவ் கங்குலியை வாழ்த்திய சச்சின் டெண்டுல்கர் பிடிஐ-க்கு அளித்த பேட்டி வருமாறு:

“சவுரவ் கங்குலி ஒரு கிரேட் கேப்டன், வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பதிலும் கண்டிப்பதிலும் ஒரு சமச்சீர் தன்மையை கங்குலி கடைப்பிடித்தார். வீரர்களுக்கு செல்லமும் கொடுப்பார், பொறுப்புகளையும் அளிப்பார். அவர் கேப்டனாக பொறுப்பேற்கும் போது இந்திய அணி மாறும் ஒரு காலக்கட்டத்தில் இருந்தது.

சவுரவ் கங்குலி

இந்திய அணியை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல அடுத்த வீரர்கள் குழு தேவைப்பட்டது. அந்த நேரத்தில்தான் டாப் கிளாஸ் வீரர்களான விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா உட்பட பலரும் வந்தனர். இந்த வீரர்கள் இயல்பாகவே திறன் உடையவர்களாக இருந்தாலும், இவர்களுக்கும் கேப்டனின் ஆதரவு தேவை. தங்கள் ஆட்டத்தை சுதந்திரமாக ஆட சப்போர்ட் தேவை, இங்குதான் கங்குலியின் பங்கு அளப்பரியது.

1999 ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு நான் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்த போது, கங்குலி பெயரைத்தான் நான் அடுத்த கேப்டனுக்காக பரிந்துரைத்தேன், ஏனெனில் நான் அவரை நெருக்கமாக அவதானித்திருக்கிறேன். அவரிடம் தலைமைத்துவ பண்புகள் இருப்பதை கூர்ந்து கவனித்தேன். சௌரவும் அதை ஏற்றுக் கொண்டார். இன்று நாமே பார்க்கிறோம் சவுரவ் கங்குலி எத்தனை பெரிய சாதனையை செய்திருக்கிறார் என்பதை.

1991 தொடரின் போது நானும் சவுரவ் கங்குலியும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டோம். யு-15 காலத்திலிருந்தே நானும் அவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தோம். இப்போதைய காலம் போல் மொபைல் இல்லாத காலம் எனவே நேரில் சந்தித்தால் தான் உண்டு. ஆனாலும் எங்கள் நட்பு இன்றுவரை இணைபிரியாமல் உள்ளது. கங்குலியுடனான கிரிக்கெட் காலங்கள், களத்துக்கு வெளியே செலவிட்ட கணங்கள் நினைவிலிருந்து என்றும் அகலாதவை” என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

First published:

Tags: Birthday, Sachin tendulkar, Sourav Ganguly