உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பின் கேப்டன் கோலி பேசியதாவது, ’ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணிக்கு மிக சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு, ஃப்ல்டிங் இரண்டிலும் சிறப்பான நிலையில் இருந்தோம்.
நியூசிலாந்து இலக்கை நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் முதல் அரைமணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் அவர்கள்தான்.
தோனியும், ஜடேஜாவும் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். போட்டி மீண்டும் எங்கள் கைக்கு வந்ததாகவே உணர்ந்தோம். சில தவறான ஷாட்களை நாங்கள் தேர்ந்தெடுத்து விட்டோம். அதுதவிர நாங்களும் தரமான பங்களிப்பை கொடுத்துள்ளோம்.
தொடரின் நாங்கள் பெற்ற அனைத்து வெற்றியையும் கடைசி 45 நிமிடங்கள் சிதைத்துவிட்டது. போட்டியில் இருந்து ஏதாவது ஒரு அணி வெளியேற தான் வேண்டும். நியூசிலாந்து அணிக்கு அந்த தகுதி உள்ளது. அவர்கள் பதற்றமின்றி தைரியத்துடன் எங்களை எதிர்கொண்டு ஆடினார்கள். இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்’ என்றார்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.