முகப்பு /செய்தி /விளையாட்டு / திராவிட் ஒரு நாளும் இப்படியெல்லாம் பேசமாட்டார் - ரவி சாஸ்திரியை காய்ச்சிய கவுதம் கம்பீர்

திராவிட் ஒரு நாளும் இப்படியெல்லாம் பேசமாட்டார் - ரவி சாஸ்திரியை காய்ச்சிய கவுதம் கம்பீர்

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி

  • Cricketnext
  • 1-MIN READ
  • Last Updated :

இப்போதைய இந்திய அணிதான் உலகின் நம்பர் 1 வேறு இந்திய அணிகள் எதுவும் இதன் முன்னால் நிற்க முடியாது என்று ரவி சாஸ்திரி கூறுவதைக் கடுமையாகக் கண்டித்த கவுதம் கம்பீர், ராகுல் திராவிடிடமிருந்து ஒருநாளும் இப்படிப்பட்ட கூற்றுக்கள் வராது என்றார்.

சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போதுதான் இந்திய அணி இருமுறை ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்தது. இங்கிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட வெற்றிகள் பெற்றது. இதனையடுத்து ரவி சாஸ்திரி பேசியதை கவுதம் கம்பீர் கண்டித்துள்ளார்.

அதாவது இந்த இந்திய அணிதான் உலகிலேயே சிறந்த அணி என்று ரவிசாஸ்திரி கூறியதை கண்டித்த கம்பீர், நம் சாதனைகளை அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும், நம்மை நாமே மார்தட்டிக் கொள்ளக் கூடாது, சுயதம்பட்டம் அடித்துக் கொள்ள கூடாது.

டைம்ஸ் நவ் நவபாரத்தில் கவுதம் கம்பீர் கூறும்போது, “நாம் நன்றாக ஆடும்போது நம்மைப் பற்றி நாமே உயர்த்திப் பேசுவதும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதும் ஆச்சரியமாகவே உள்ளது. மற்றவர்கள்தான் நம்மை புகழ வேண்டுமே தவிர தற்பெருமை கூடாது. 2011 உலகக்கோப்பையை வென்ற போது இந்த இந்திய அணி உலகிலேயே சிறந்தது என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை.

நாம் வெல்கிறோம் என்றால் மற்றவர்கள் அதைப்பற்றி சிலாகித்துப் பேசட்டும். ஆஸ்திரேலியாவில் வென்றாய் அது பெரிய சாதனைதான் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் நன்றாக ஆடினீர்கள் வென்றீர்கள், சந்தேகமில்லை. ஆனால் புகழ்வதை மற்றவர்கள் செய்யட்டும். ராகுல் திராவிட் இடம் ஒருக்காலும் சுயதம்பட்டம் வரவே வராது. நாம் நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் திராவிட்டின் கருத்து சமச்சீராகவே இருக்கும். மேலும் பிற வீரர்களையும் அவர் குறிப்பிடுவார்.

நன்றாக ஆடுகிறோமோ இல்லையோ, தன்னடக்கம், விவேகம் மிக மிக முக்கியம். கிரிக்கெட் எப்போதும் நம் வாழ்க்கையில் வந்து கொண்டேயிருக்காது. திராவிடின் மிகப்பெரிய பங்களிப்பு என்னவாக இருக்குமெனில் முதலில் நல்ல மனிதர்களாக இருப்போம் என்பதில் கவனமாக இருக்கும் என்றே கருதுகிறேன்” என்றார் கம்பீர்.

இப்போது டி20 தொடரில் நியூசிலாந்தை 3-0 என்று வென்றாலும் மகிழ்ச்சியடைந்த திராவிட், ‘நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பை இறுதியில் ஆடி விட்டு பிறகு 2 நாட்களில் மேலும் 3 போட்டிகளை வேறு வேறு மைதானங்களில் 6 நாட்களில் ஆடுவதென்றால் பாவம்’ என்று மனிதாபிமானத்துடன் அணுகியதைத்தான் கம்பீர் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது.

First published:

Tags: Gautam Gambhir, Rahul Dravid, Ravi Shastri