ஹோம் /நியூஸ் /sports /

இப்படி ஒரு ஷாட்டா..? பாராட்டிய கம்பீர்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

இப்படி ஒரு ஷாட்டா..? பாராட்டிய கம்பீர்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

கைல் மையர்ஸ் அடித்த சிக்சரை பாராட்டிய கம்பீர்

கைல் மையர்ஸ் அடித்த சிக்சரை பாராட்டிய கம்பீர்

மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்யும் போது 4ஆவது ஓவரில் கேமரான் கிரீன் வீசிய பந்து அவுட் சைட் ஆஃப் திசையில் பவுன்ஸ் ஆகி வர, அதை அவர் ஸ்வீப்பர் கவர் மீது சிக்சர் அடித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustralia

  ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில் கிரீன் வீசிய பந்தை மேற்கிந்திய வீரர் மேயர்ஸ் விளையாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் 145 ரன்களை அடித்தது. பிறகு களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

  மேலும் படிக்க : டி20 உலக கோப்பையை மிஸ் செய்யும் நட்சத்திர வீரர்கள்..

  இதில் மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்யும்போது 4ஆவது ஓவரில் கேமரான் கிரீன் வீசிய பந்து அவுட் சைட் ஆஃப் திசையில் பவுன்ஸ் ஆகி வர, அதை அவர் ஸ்வீப்பர் கவர் மீது சிக்சர் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

  இந்த வீடியோவை ஷேர் செய்த கம்பீர், நீங்கள் இதை எல்லாம் செய்ய அனுமதி இல்லை என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

  மேலும் இந்த வீடியோவிற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட், இதற்கு முன் கிரிக்கெட்டில் பல அற்புதமான ஷாட்கள் உள்ளன. ஆனால் அதுவெல்லாம் எனக்கு நினைவில்லை என எழுதியுள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Australia, Cricket, Gautam Gambhir, West indies