முகப்பு /செய்தி /விளையாட்டு / பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்- சேவாக் ரியாக்‌ஷன்

பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய ரசிகர்கள்- சேவாக் ரியாக்‌ஷன்

சேவாக்

சேவாக்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி கொண்டதை பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடியது குறித்து விரேந்திர சேவாக் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பட்டாசு வெடிப்பதில் தடை இருக்கிறது, ஆனால் நேற்று பாகிஸ்தான் வென்றதை ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். இது எப்படி, தீபாவளிப் பண்டிகை அன்று தடை விதிக்கப்பட்ட பட்டாசு நேற்று எப்படி வெடிக்க முடியும் என்ற ரீதியில் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார், அதாவது நேற்று பட்டாசு வெடிக்க முடியும் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாட முடியும் என்றால் தீபாவளியன்று ஏன் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற ரீதியில் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேவாக், தன் ட்விட்டரில், “இந்தியாவில் பட்டாசு வெடிக்க தீபாவளியன்று தடை உள்ளது. ஆனால் நேற்று இந்தியாவின் சில பகுதிகளில் பாகிஸ்தான் வெற்றி வெடி வெடித்து கொண்டாடப்பட்டது. கிரிக்கெட்டின் வெற்றியை அவர்கள் கொண்டாடியிருக்கலாம். ஆனால் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் என்ன தீங்கு வந்து விடும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடியதை கண்டித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தன் டிவிட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது. நாம் நம் அணியின் பக்கம் நிற்போம்”என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Gautam Gambhir, India vs Pakistan, T20 World Cup, Virender sehwag