முகப்பு /செய்தி /விளையாட்டு / முதலில் பிசிசிஐ தலைவர் கங்குலியை நிறுத்தச் சொல்லுங்க..- கம்பீர் தாக்கு

முதலில் பிசிசிஐ தலைவர் கங்குலியை நிறுத்தச் சொல்லுங்க..- கம்பீர் தாக்கு

கங்குலி - கம்பீர்

கங்குலி - கம்பீர்

இத்தகைய ஃபேண்டசி லீக் நிறுவனங்களை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியே ஊக்குவித்து வருகிறார் என்றால் நாம் மற்ற வீரர்க்ளை இதைச்செய்யாதே என்று கூற முடியுமா? என கம்பிர் கேள்வி எழுப்பியுள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

இந்திய விளையாட்டுத் துறையில் நேரடியாக விளம்பரம் கொடுக்காமல் அதன் பெருத்த கட்டணங்களிலிருந்து தப்பிக்க,  “ஃபேண்டசி லீக்” போன்றவை மூலம் விளம்பரத்தை மறைமுகமாகச் செய்கின்றனர், இந்தப் போக்கை பிசிசிஐ தலைவர் கங்குலியே ஊக்குவிக்கிறார், அவர் விட்டால்தானே, வீரர்களையும் தடுக்க முடியும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடகத்தின் ஐடியா எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த கம்பீர் இந்தக் கருத்தை தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் பெரும்பாலான விளம்பர ஒப்பந்தங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் ட்ரீம் லெவன் உள்ளிட்ட ஃபேண்டசி லீக் நிறுவனங்களிடமிருந்தே வருகின்றன.

எனவே பிசிசிஐ தான் இதைத் தடுக்க முடிவெடுக்க வேண்டும்.  ஒரு விதத்தில் ஆன்லைன் பெட்டிங்கும் ஃபேண்டசி லீகும் ஒன்றுதான் என்றாலும் ஃபேண்டசி லீக் நிறுவனங்கள் பணத்தை ஊக்குவிப்பதில்லை, சூதாட்ட நிறுவனங்கள் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பவை.

மேலும் படிக்க : நியூசிலாந்து ஏ-அணிக்கு எதிராக ருதுராஜ் சதம்.. இந்திய ஏ அணி வெற்றி 

அரசு வடிவமைத்த வரைவு வழிகாட்டுதலில் நேரடியாக விளம்பரம் செய்யாமல் இவ்வாறு மாற்று விளம்பர உத்திகள் செய்ய நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் கம்பீர் கூறும்போது, “இத்தகைய ஃபேண்டசி லீக் நிறுவனங்களை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியே ஊக்குவித்து வருகிறார் என்றால் நாம் மற்ற வீரர்களை இதைச்செய்யாதே என்று கூற முடியுமா?

தலையிலிருந்து இது தொடங்க வேண்டும்.  மாநில தடை மட்டும் இதற்குப் போதாது, இந்தியாவில் இது தடைசெய்யப்படுமா என்பது கூட்டு முடிவின்பாற்பட்டது” என்கிறார் கம்பீர். அதாவது யாரும் இத்தகைய விஷயங்களை அங்கீகரிக்கக் கூடாது, ஊக்குவிக்கக் கூடாது, பங்கேற்கக் கூடாது என்கிறார் கம்பீர்.

First published:

Tags: BCCI, Gautam Gambhir, Sourav Ganguly