''மூளையைப் பயன்படுத்துங்கள்'' இளம்வீரரிடம் கோபப்பட்ட ரோஹித் - வைரல் வீடியோ

''மூளையைப் பயன்படுத்துங்கள்'' இளம்வீரரிடம் கோபப்பட்ட ரோஹித் - வைரல் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 3:39 PM IST
  • Share this:
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நவ்தீப் சைனி பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரி கொடுத்ததால் அவரிடம் ரோஹித் சர்மா கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இந்தப் போட்டியின் இடையே விராட் கோலி களத்தில் இல்லாத போது ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்தார். 12வது ஓவரை இளம் வீரர் நவ்தீப் சைனி வீசினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால் பொறுமை இழந்த ரோஹித் சர்மா கொஞ்சம் மூளையை பயன்படுத்துங்கள் என்று செய்கை மூலமாக தெரிவித்தார்.




இளம்வீரரிடம் கோபப்பட்ட ரோஹித் சர்மாவின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் சைனி 2 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்தார்.

Also Watch

First published: September 26, 2019, 3:39 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading