• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இது ஆரம்பம்தான் நண்பா: ஷ்ரேயஸ் அய்யரைப் பாராட்டிய ரிக்கி பாண்டிங்

இது ஆரம்பம்தான் நண்பா: ஷ்ரேயஸ் அய்யரைப் பாராட்டிய ரிக்கி பாண்டிங்

shreyas Iyer

shreyas Iyer

இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘டெஸ்ட் கரியருக்கான அபாரத் தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டதில் அறிமுக வீரர் ஷ்ரேயஸ் அய்யர் சதம் விளாசினார், இந்தியாவுக்காக 16வது வீரராக அறிமுக டெஸ்ட்டில் சதம் விளாசியுள்ளார் அய்யர். இதனையடுத்து அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.

    ஷ்ரேயஸ் அய்யர் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்க்ளுடன் 171 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து சவுதீயின் ஒன்றுமேயில்லாத ஒரு பந்தில் கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். டி20 ஆடி ஆடி இந்த வகையில் ஆட்டமிழப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந்நிலையில் அவரைப் பாராட்டி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங், “கடந்த சில ஆண்டுகளாக நீ போட்ட கடின உழைப்பு உனக்கு தகுதியானதைப் பெற்றுத்தந்துள்ளது, இது வெறும் ஆரம்பம்தான் நண்பா, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

    இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘டெஸ்ட் கரியருக்கான அபாரத் தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார்.

    ஷ்ரேயஸ் அய்யரைப் பாராட்டி வெளியான ட்வீட்கள் இதோ:















    இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, ஷ்ரேயஸ் அய்யர் இந்திய டெஸ்ட் அணிக்காக முதல் டெஸ்ட்டிலேயே சதம் எடுத்த 16வ்து இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: