• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • குழிப்பிட்ச்களில் வெல்லும் அணியா இந்தியா? -விமர்சகர்களுக்கு சேவாக் பதிலடி

குழிப்பிட்ச்களில் வெல்லும் அணியா இந்தியா? -விமர்சகர்களுக்கு சேவாக் பதிலடி

சேவாகின் ட்வீட்.

சேவாகின் ட்வீட்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று 210 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி இந்திய அணி தொடரை வெல்லும் நிலையில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது, இது குறித்து பிரதமர் மோடி முதல் சேவாக் வரை அனைவரும் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

  • Share this:
    ஓவல் டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான நேற்று 210 ரன்களுக்கு இங்கிலாந்தை சுருட்டி இந்திய அணி தொடரை வெல்லும் நிலையில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது, இது குறித்து பிரதமர் மோடி முதல் சேவாக் வரை அனைவரும் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

    விமர்சகர்கள் கூறுவது என்னவெனில் இவ்வளவு திறமியை ஸ்விங் பிட்ச்களிலும் ஆஸ்திரேலிய பவுன்ஸ் பிட்ச்களிலும் காட்டிய பிறகும் இன்னும் ஏன் குழிப்பிட்சைபோட்டு இங்கு ஜெயிக்க வேண்டும் என்பதே, இது புரியாமல் சேவாக் இந்திய அணி குழிப்பிட்ச்களில் வெல்லும் அணி என்று கூறுபவர்களுக்கு பதிலடி கொடுப்பதாக தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் சேவாக் பயன்படுத்தியுள்ளார்.

    சேவாக் தன் ட்விட்டரில் கூறியிருப்பது இதுதான்: இந்தியா இந்தியாவில் பந்துகள் திரும்பும் பிட்ச்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறுபவர்களுக்கு டீம் இந்தியாவின் பதில்தான் ஓவல் வெற்றி, இப்படியெல்லாம் இந்திய அணியை நினைக்காதீர்கள் மரியாதை கொடுங்கள். என்கிறார் சேவாக்.

    பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ’மீண்டும் ஒரு சிறந்த தினம். தடுப்பூசியிலும் சாதனை கிரிக்கெட் பிட்சிலும் சாதனை, எப்போதும் டீம் இந்தியா வெற்றி பெறுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.



    சவுரவ் கங்குலி: கிரேட் ஷோ, திறமைதான் வித்தியாசம். ஆனால் பெரிய வித்தியாசம் அழுத்தத்தை தனதாக்கிக் கொண்டு வெளிவருவது. இந்திய கிரிக்கெட் மற்ற அணிகளை விட வெகுவாக முன்னேறி விட்டது.

    சச்சின் டெண்டுல்கர்: வாட் எ கம் பேக். ஒவ்வொரு முறை பின்னடைவு காணும்போதும் வீரர்கள் எழுச்சி பெறுகின்றனர். 77/0 என்று இங்கிலாந்து இருந்த போது என்ன மாதிரியான அதாரிட்டியை காட்டினோம். இப்படித்தான் போக வேண்டும் வீரர்களே. 3-1 என்று மாற்றுவோம்.



    தினேஷ் கார்த்திக்: டீம் இந்தியா ஒவ்வொரு தொடரிலும் புதிய உச்சங்களை தொடுகிறது.

    லஷ்மண்: 127/7 என்ற நிலையிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறுவதெல்லாம் எல்லா அணிகளுக்கும் சாத்தியமல்ல. இதனால்தான் இது ஸ்பெஷல் இந்தியன் டீம். மறக்க முடியாத வெற்றி... நன்றி.

    ஜெய் ஷா: லார்ட்ஸ் வெற்றி ஸ்பெஷல் என்றால் இந்த வெற்றி கண்கொள்ளா விருந்து. பும்ராவின் 100 விக்கெட்டுகளுக்கான பயணம் அபாரமானது, வாழ்த்துக்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: