நெட் டு நட்டு..; ஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியல்லண்ணா: நடராஜன் - அஸ்வின் ருசிகரம்
சவுரியமா ஆடினேனா ஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியலண்ணா!

அஸ்வின் -நடராஜன்.| ட்விட்டர்.பிசிசிஐ.
- News18 Tamil
- Last Updated: January 18, 2021, 8:09 AM IST
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை கதறவிட்டு முதல் இன்னிங்சில் 336 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தற்போது 149/4 என்று 182 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர், அறிமுக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7ம் நிலையில் இறங்கி 62 ரன்கள் எடுத்து அற்புதமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி அசத்தி சாதனை புரிந்தார்.
கடைசியில் நடராஜன் இறங்கினார். 9 பந்துகள் தாக்குப் பிடித்து 1 ரன் எடுத்தார். இதனையடுத்து அவர் கடந்த 10 இன்னிங்ஸ்களில் நேற்றுதான் ஒரு ரன் எடுக்கிறார் என்று அஸ்வின் பிசிசிஐ.டிவி வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிசிசிஐ.டிவிக்காக இருவரும் ருசிகரமாக நட்பு ரீதியான கலாய்ப்புடன் உரையாடியது வருமாறு:
ஷர்துல் தாக்குர், சுந்தர் அருமையாக ஆடியதை நடராஜன் எங்கு ஷோ-வை தன் பக்கம் ஈர்த்து விடுவாரோ என்று நினைத்தேன். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு ரன் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கினார் நடராஜன்.
ஸோ நட்டு, டெஸ்ட் கிரிக்கெட்ல ஆஃப் த மார்க், 4 அடித்து ரன் கணக்கைத் தொடங்குவார் என்று சொன்னேன். ரன் எடுத்தது ஹவ் டு யூ ஃபீல்? மிட்செல் ஸ்டார்க் பந்தை தடுத்தாடின, அவர சவுகரியமா நீதான் ஆடின..
நடராஜன் (சிரித்தபடியே), : சவுரியமா ஆடினேனா ஃபர்ஸ்ட் பால் கண்ணுக்கே தெரியலண்ணா!
அஸ்வின் (கேமராவைப் பார்த்து).. நடராஜன் கேமரா முன்னால் வரவே மாட்டார், வெட்கப்படுவார்.
“நட்டு... நெட்டு டு நட்டு.. நெட் பவுலர் டு நட் பவுலர் , டி20, டெஸ்ட், ஒருநாள் டெபூ எப்படி மச்சி இருக்கு?
நடராஜன்: ரொம்ப ஹேப்பியா இருக்குணா, நீங்க சொன்னா மாதிரி என்ன பேசறதுன்னே தெரியல்ல. டெஸ்ட்ல சான்சே நான் எதிர்பார்க்கவே இல்லை. நெட் பவுலராகவே முடிச்சுட்டு போயிடலாம்னுதான் நினச்சேன், நிறைய பேர் காயத்துனால எனக்கு வாய்ப்பு கிடச்சுது. எதிர்பார்க்கவே இல்ல, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நேற்றைய ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர், அறிமுக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7ம் நிலையில் இறங்கி 62 ரன்கள் எடுத்து அற்புதமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடி அசத்தி சாதனை புரிந்தார்.
கடைசியில் நடராஜன் இறங்கினார். 9 பந்துகள் தாக்குப் பிடித்து 1 ரன் எடுத்தார். இதனையடுத்து அவர் கடந்த 10 இன்னிங்ஸ்களில் நேற்றுதான் ஒரு ரன் எடுக்கிறார் என்று அஸ்வின் பிசிசிஐ.டிவி வீடியோவில் தெரிவித்துள்ளார்.
This interaction is all heart ❤️ courtesy @ashwinravi99 & @Natarajan_91🎙️I am happy at the moment. Never expected to play a Test for India on this tour: Natarajan pic.twitter.com/jhCWksJffS
— BCCI (@BCCI) January 17, 2021