ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

1983 உலகக்கோப்பையை வென்று ஓராண்டில் கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்ட கபில் தேவ் முதல் விராட் கோலி வரை

1983 உலகக்கோப்பையை வென்று ஓராண்டில் கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்ட கபில் தேவ் முதல் விராட் கோலி வரை

விராட் கோலி-கபில்தேவ்

விராட் கோலி-கபில்தேவ்

கவாஸ்கர் பாகிஸ்தானிடம் 1979-80 தொடரில் தோற்ற போது கபில்தேவிடம் கொடுக்கப்பட்ட கேப்டன்சி, 1984-ல் மீண்டும் கவாஸ்கரிடமே வந்தது. கவாஸ்கர் கேப்டனானவுடன் இங்கிலாந்துக்கு எதிராக கபில்தேவை ஒரு டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்து ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளானார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விராட் கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து அணித்தேர்வுக்குழு நீக்கியது பெரிய சர்ச்சைகளையும் அதே வேளையில் வரவேற்புகளையும் பெற்றுள்ள நிலையில் கிரிக்கெட்டில் கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்ட பெரிய தலைகள் பற்றி பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட்டில் எந்த கேப்டனும் தானாகவே தன் கேப்டன்சியை உதறியதில்லை, டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து தோனி 2014 ஆஸ்திரேலியா தொடரில் விலகினாலும் அவரது கேப்டன்சியில் அயல்நாட்டில் கடும் தோல்விகளைச் சந்தித்தது குறித்தும் அவரது மோசமான கேப்டன்சி குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்து அவ்ருக்கு கடும் நெருக்கடி இருந்தது, அந்த நெருக்கடியில்தான் அவர் விலகினார், தானாகவே அவர் விருப்பப்பட்டு போதும் என்று விலகவில்லை. அதே போல்தான் ஒருநாள், டி20 கேப்டன்சியிலிருந்தும் தோனி விலக நெருக்கடி அளிக்கப்பட்டது ஏனெனில் கோலி தயாராக இருந்தார்.

தோனி, கோலி, ரோகித் சர்மா- ஐபிஎல் 2022 தக்கவைக்கப்பட்ட வீரர்கள் முழு விவரம்

இவையெல்லாம் கிரிக்கெட்டில் சகஜம்தான். கெப்லர் வெசல்ஸ் தென் ஆப்பிரிக்கா அணியை நன்றாகத்தான் வழிநடத்தினார், ஆனால் ஹான்சி குரோனியே என்ற பெரிய கேப்டன் மூளை தயாராக இருக்கும் போது வெசல்ஸ் சேவைத் தேவைப்படாமல் போனது. ஆகவே இதில் ஒன்றும் தவறில்லை.

ஆனால் இந்திய கிரிக்கெட்டில் கபில் தேவ் தான் பரிதாபம், இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்பு முனை ஏற்படுத்திய 1983 உலகக்கோப்பையை வென்றார். ஒரு அணியை கட்டமைத்தார். அணிக்குள் புதிய ஆற்றலைப் புகுத்தி ஒருநாள் கிரிக்கெட் இந்தியா முழுக்க பிரபலமானதற்குக் காரணம் கபில் தேவ் என்ற ஒரு தனிநபரின் தலைமைத்துவம், பேட்டிங் என்றால் அது மிகையாகாது.

ஆனால் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையை வென்ற பிறகு 1984ம் ஆண்டு கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்டார். காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்மை இங்கு வந்து பழித்தீர்த்து துவம்சம் செய்தது, ஆனால் கபில்தேவ் அப்போதுதான் கேப்டனாக அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 30 ஓவர்களை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக வீசி 83 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தியாவுக்கு குறைந்த வெற்றி இலக்கு, ஆனால் பேட்டர்கள் சொதப்ப இந்தியா 101 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைந்ததோடு டெஸ்ட் தொடரை 3-0 என்றும் ஒருநாள் தொடரை 6-0 என்றும் இந்திய அணி இழந்தது.

உலகக்கோப்பையுடன் கேப்டன் கபில், ஆட்ட நாயகன் அமர்நாத்.

கவாஸ்கர் பாகிஸ்தானிடம் 1979-80 தொடரில் தோற்ற போது கபில்தேவிடம் கொடுக்கப்பட்ட கேப்டன்சி, 1984-ல் மீண்டும் கவாஸ்கரிடமே வந்தது. கவாஸ்கர் கேப்டனானவுடன் இங்கிலாந்துக்கு எதிராக கபில்தேவை ஒரு டெஸ்ட் போட்டியில் உட்கார வைத்து ரசிகர்களின் கடும் கோபத்துக்கு ஆளானார். பிறகு சென்னை டெஸ்ட்டில் கபில் மீண்டும் வந்தார். அப்போது சென்னை ரசிகர்கள் கவாஸ்கரைக் கிண்டல் செய்து கபில் தேவ் இஸ் ஃபார் வேர்ல்ட் கப், கவாஸ்கர் இஸ் ஃபார் டீ கப் என்று கேலி செய்தனர். ஏன் தமிழ்நாட்டின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாகிஸ்தானுக்கு கேப்டன்சி பொறுப்பு ஏற்று சென்று 4 டெஸ்ட் போட்டிகளையும் டிரா செய்தார். ஆனால் பிறகு கேப்டன்சியிலிருந்து மட்டுமல்ல அணியிலிருந்தே தூக்கப்பட்டார். பிறகு 1991 ஆஸ்திரேலியா தொடருக்கு வந்து 1992 உலகக்கோப்பையில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

கேப்டன்சியை அதே போல் இழந்தவர்கள் பட்டியலில் கங்குலி இருக்கிறார், கிரெக் சாப்பலை விரும்பி பயிற்சியாளராகக் கொண்டு வந்தவர் கங்குலிதான், ஆனால் கேப்டன்சி மூலமாகவே அணியில் தன்னை தக்கவைக்கும் போக்கு தாதாவிடம் இருந்தது, அதனால் கேப்டன்சியை விட்டு தூக்கப்பட்டார். முகமது அசாருதீன் கடுமையாக கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் சிக்கி அசார் தவறு செய்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட தூக்கப்பட்டார். பிறகு தடையும் செய்யப்பட்டார்.

கங்குலி

திலிப் வெங்சர்க்கார் கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். பிஷன் சிங் பேடி தூக்கப்பட்டுள்ளார், ஆகவே கோலி புதிதல்ல. ஆனால் கோலி இதனை புரிந்து கொண்டு தன்னை கார்னர் செய்கின்றனர் என்பதை உணர்ந்து விலகியிருந்தால் இந்த அவமானத்தை தவிர்த்திருக்கலாம். கோலியின் கேப்டன்சி அணுகுமுறை அணிக்குள் பல வீரர்களை காயப்படுத்தியது தான் கோலி கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்டதற்குக் காரணம் என்று விஷயத்துக்கு நெருக்கமாக இருக்கும் ஊடகங்கள் கூறுகின்றன.

First published:

Tags: Captain Virat Kohli, MS Dhoni, Sourav Ganguly