ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இதல்லவோ கேச்....பவுண்டரி லைனில் பறந்து, பாய்ந்து 'பீல்டிங்' செய்த ஆஸ்திரேலிய வீரர்!

இதல்லவோ கேச்....பவுண்டரி லைனில் பறந்து, பாய்ந்து 'பீல்டிங்' செய்த ஆஸ்திரேலிய வீரர்!

ஆஷ்டன் அகர்

ஆஷ்டன் அகர்

பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மலான் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார். அதை டீப் மிட் விக்கெட் திசையில் அடித்தார். அது ஒரு நிச்சயமான சிக்ஸராக இருக்கும் என்று அரங்கமே எதிர்பாத்துக்கொண்டிருந்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] |

  ODI மற்றும் T20I உலகக் கோப்பை இரண்டிலும் தங்கள் திறமையால் ஆட்சி செய்து வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட சர்வதேச தொடரில் கடந்த 17 ஆம் தேதி பங்கேற்றது.

  ஆஸ்திரேலியா அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட 50 ஓவர் போட்டியின் முதல் ஆட்டம் வியாழன் அன்று தொடங்கியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

  முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி டேவிட் மலானின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 287 ரன்கள் குவித்தது. எண்டேவிட் மாலன்அதிகபட்சமாக 128 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார்.288 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 291 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

  இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை பரிசுத்தொகையை விட சுமார் 100 மடங்கு அதிகம்... வியக்க வைக்கும் பிஃபாவின் பரிசுத்தொகையும், வருமானமும்...

  இதில் பேட்டிங் இல் வெற்றி கோடி நாட்டிய ஆஸ்திரேலிய அணி பவுலிங்கில் மாஸ் காட்டி மக்களை சீட் கடைசிக்கு கொண்டுவந்து குதூகலப்படுத்தியுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் சுழற்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் அற்புதமான முயற்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 29 வயதான அவர் களத்தில் ஒரு உறுதியான சிக்ஸர் என்று நினைத்த பந்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளார். அதையும் அவர் பிடித்த ஸ்டைல் தான் இப்பொது இணையத்தை கலக்கி வருகிறது.

  புதிய ஆஸ்திரேலிய ஒருநாள் கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய 45வது ஓவரின் இறுதி பந்தில் இந்த சம்பவம் நடந்தது. பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மலான் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றார். அதை டீப் மிட் விக்கெட் திசையில் அடித்தார். அது ஒரு நிச்சயமான சிக்ஸராக இருக்கும் என்று அரங்கமே எதிர்பாத்துக்கொண்டிருந்தனர்.

  ஆனால் இடையில் நம்ம ஹீரோ அகர் அதை ஆஜரான தாவலில் பிடித்து பவுண்டரி செல்லாமல் அதனை உள்ளே வீசினார். அவர் காற்றில் பறந்து பந்தை பிடித்து போட்டதை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.அவரது வீர முயற்சியின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது.

  தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக ஆடி, வெற்றியோடு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பைக்கு முன் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று, அத்துடன் இரண்டாவது டி20 உலகக் கோப்பை கோப்பையைக் கைப்பற்றியது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Australia vs England, Cricket, One day match