முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்?

ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 புதிய அணிகள்?

IPL

IPL

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கூட்டம் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்றது.

  • Last Updated :

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வருவதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய அணிகளைப் பெறுவதற்கு போட்டிப் போட்டு வருகின்றன.

இந்தியாவில் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.பி.எல் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பி.சி.சி.ஐ நடத்தும் இந்த தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன.

ஐ.பி.எல் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்ததை தொடர்ந்து 2011-ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணியும், புனே சூப்பர் ஜெயிண்ட் அணியும் சேர்க்கப்பட்டன. ஆனால் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அந்த அணி தொடர்ந்து நீடிக்கவில்லை.

இதன்பின் சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இந்த 2 அணிகளின் இழப்பை சரிகட்டும் வகையில் குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே அணிகள் 2 ஆண்டுகளுக்கு மட்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வந்தது.

இந்நிலையில் லண்டனில் ஐ.பி.எல் அணியின் உரிமையாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் சில அணிகளை கூடுதலாக சேர்க்க வேண்டும் என்று விவாதிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்த ஐ.பி.எல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது 8 அணிகள் விளையாடி வரும் ஐ.பி.எல் தொடரில் 2 அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதானி குழுமம் சார்பில் அஹமதாபாத்தில் இருந்து ஒரு அணியையும், ஆர்.பி.ஜி நிறுவனம் சார்பில் புனேவில் இருந்து ஒரு அணியும், டாடா குழுமம் சார்பில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்து ஒரு அணியும் உருவாக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read : உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் 7 பேர் அயல்நாட்டவர்!

top videos

    First published:

    Tags: Cricket, IPL