அன்று ஆபாச பட நடிகர்... இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நடுவர்.. யார் இவர்?

Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 8:48 PM IST
அன்று ஆபாச பட நடிகர்... இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நடுவர்.. யார் இவர்?
கார்ட் ஸ்டிராட்
Web Desk | news18-tamil
Updated: November 8, 2019, 8:48 PM IST
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டியில் நடுவராக செயல்பட்டவர் ஆபாச படங்களில் நடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது டி20 போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மலானின் அதிரடியான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. மலான் 51 பந்துகளில் 9 பவுண்டரி 6 சிக்சர்கள் என 103 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.3 ஓவர்களில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்று சமனில் உள்ளது.


இந்தப் போட்டியில் 4வது நடுவராக 51 வயதான கார்ட் ஸ்டிராட் செயல்பட்டார். இவர் இதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். 10 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து தொழில்முறை கோல்ப் சங்கத்தில் தலைமை நிர்வாகியாக இருந்து உள்ளார். ஆபாச படங்களில் நடித்ததை ரகசியமாக வைத்திருந்தார். பின் அனைவருக்கும் தெரிய வந்ததால் அந்த பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின் சர்வசேத மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடுவராக ஒரு வெற்றிக்கரமான வாழ்க்கையை தொடங்கினார்.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...