• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீகில் ஒப்பந்தமான முதல் இந்திய வீரர் - சேவாக் போல் ஆடக்கூடியவர்

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீகில் ஒப்பந்தமான முதல் இந்திய வீரர் - சேவாக் போல் ஆடக்கூடியவர்

பிக் பாஷ் லீக்

பிக் பாஷ் லீக்

உலகக்கோப்பை யு-19 சாம்பியன் முன்னாள் அணியின் கேப்டனான உன்முக்த் சந்த் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீகில் முதன் முதலாக ஒப்பந்தமான இந்திய வீரர் ஆனார். மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

  • Share this:
    உலகக்கோப்பை யு-19 சாம்பியன் முன்னாள் அணியின் கேப்டனான உன்முக்த் சந்த் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 லீகில் முதன் முதலாக ஒப்பந்தமான இந்திய வீரர் ஆனார். மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு உன்முக்த் சந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்டில் ஓய்வு பெற்ற உன்முக்த் சந்த் அமெரிக்காவில் கிரிக்கெட் லீகுகளில் ஆடிவருகிறார். சமீபத்தில் சிலிக்கன் வாலி அணியை மைனர் லீக் கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். ஏனெனில் இவர்தான் அந்த அணியின் கேப்டன், கோப்பைகளை வெல்லும் நுணுக்கம் தெரிந்தவர், சேவாக் போல் பேட் செய்ய கூடியவர்.

    டிசம்பர் 5ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய பிக்பாஷ் டி20 லீகில் மெல்போர்ன் ரெனகேட் அணிக்கு உன்முக்த் சந்த் ஆடுகிறார். இது தொடர்பாக இவர் கூறும்போது, “எனக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது, மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்கு ஆடுவது குறித்து ஆவலாக இருக்கிறேன். நான் பிக் பாஷ் லீகை தொடர்ந்து பார்த்து வருகிறேன், நல்ல கிரிக்கெட்டை ஆடுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

    எனக்கு எப்போதும் ஆஸ்திரேலியாவில் ஆடுவதென்றால் மிகவும் பிடிக்கும். நான் இதுவரை மெல்போர்ன் சென்றதில்லை, அங்கு இந்தியர்கள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே இது பிரமாதம், ஆட்டங்களுக்கு நிறைய கூட்டம் வரும் என்று ஆவலாக இருக்கிறேன்” என்றார் உன்முக்த் சந்த்.

    பிபிஎல் லீக் ஆட்ட அட்டவணை.


    ரெனகேட்ஸ் கேப்டன் யார் தெரியுமா? ஆஸ்திரேலிய அணியின் வெள்ளப்பந்து அணியின் கேப்டன் ஏரோன் பிஞ்ச்தான். ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பேட்டின்சன், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய சர்வதேச வீரர்கள் உள்ளனர்.

    முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆடியுள்ள உன்முக்த் சந்த், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளில் இருந்துள்ளார். 21 போட்டிகளில் மொத்தம் ஆடியுள்ளார்.

    இப்போது உன்முக்த் சந்த் 77 டி20 போட்டிகளில் ஆடிய அனுபவத்துடன் முதன் முதலாக தரமான பிக்பாஷ் டி20 லீகில் ஆடுகிறார், இங்கெல்லாம் கிரிக்கெட் தான் முக்கியம், கிரிக்கெட்டின் தராதரங்களின்படி ஆடப்படும், ஐபிஎல் தொடர் போல் வர்த்தக நலன்களுக்காக கிரிக்கெட் பலி கடா ஆக்கப்பட மாட்டாது. உன்முக்த் சந்த் 1565 ரன்களை எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள், 5 அரைசதங்கள் அடங்கும்.

    டிசம்பர் 7ம் தேதி அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக உன்முக்த் சந்த் ஆட்டத்தை மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக கண்டு களிக்கலாம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: