சூதாட்ட புகார்: ஜெயசூரியாவை தொடர்ந்து மேலும் ஒரு இலங்கை வீரர் சஸ்பெண்ட்..!

Former Sri Lanka player #DilharaLokuhettige suspended | சில மாதங்களுக்கு முன்பு, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி சனத் ஜெயசூரியா 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கான செயல்களில் ஈடுபட ஐசிசி தடை விதித்தது.

Web Desk | news18
Updated: April 4, 2019, 9:17 PM IST
சூதாட்ட புகார்: ஜெயசூரியாவை தொடர்ந்து மேலும் ஒரு இலங்கை வீரர் சஸ்பெண்ட்..!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் தில்கரா. (ICC)
Web Desk | news18
Updated: April 4, 2019, 9:17 PM IST
சூதாட்ட புகாரில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூரியாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரர் சிக்கியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

Sri Lanka Cricket, இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி. (AP)


இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி சனத் ஜெயசூரியா 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கான செயல்களில் ஈடுபட ஐசிசி தடை விதித்தது.

Sanath Jayasuriya, சனத் ஜெயசூரியா
இலங்கை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சனத் ஜெயசூரியா. (ICC)


இந்நிலையில், சூதாட்ட புகாரில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான தில்கரா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 2 வாரங்களுக்குள் இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி-10 போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.அதன் அடிப்படையில் தற்போது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

காத்திருந்த மும்பை பாட்டி... நேரில் சென்று பார்த்த தல தோனி... வைரலாகும் புகைப்படங்கள்!

VIDEO: கேட்ச் பிடிக்காமல் ரிவியூவ் கேட்ட பாக். வீரர்... கலாய்த்த ரசிகர்கள்!

தோல்வியின்றி வரலாறா... மோதி எழுவோம்... ஹர்பஜன் சிங் ஆவேசம்!

VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!

Also Watch... இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...