விராட் கோலி பற்றி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?- நான் சொல்றேன்; மனம் திறக்கும் சரந்தீப் சிங்

விராட் கோலி

விராட் கோலி வீட்டில் வேலையாட்கள் கிடையாது. இவரும் அனுஷ்கா சர்மாவும்தான் அனைவருக்கும் உணவு பரிமாறுவார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்?

 • Last Updated :
 • Share this:
  விராட் கோலி பொதுவாக கர்வம் பிடித்தவர், யாரும் அவரை அணுக முடியாது, கண்டிப்பானவர், அணித்தேர்வுகளில் சொல்பேச்சு கேளாதவர், அனில் கும்ப்ளேயை வெளியேற்றிய பிறகே கோலி மீதான பிம்பம் இப்படித்தான் வெளி உலகில் உள்ளது, ஆனால் அப்படியில்லை என்கிறார் முன்னாள் அணித்தேர்வாளர் சரந்தீப் சிங்.

  விராட் கோலி இந்திய அணிக்கு 3 வடிவங்களிலும் கேப்டனாக 2017 முதல் இருந்து வருகிறார். இப்போது அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.

  2008-ல் இந்திய அணியில் நுழைந்து இன்று ஒரு செல்வாக்கு மிக்க கேப்டனாக அவர் திகழ்கிறார், அணித்தேர்வுக்குழுவில் யார் இருக்கலாம் வர்ணனைக் குழுவில் யார் இருக்கலாம் என்பது வரையில் அவர்தான் தீர்மானிக்கிறார்.

  இந்நிலையில் விராட் கோலி பற்றி இந்திய முன்னாள் அணித்தேர்வாளர் சரந்தீப் சிங் கூறியதாவது:

  அணிக்கூட்டத்துக்கு எப்போது விராட் கோலி வந்தாலும் கூட்டம் ஒரு மணி முதல் ஒன்றரை மணி வரை செல்லும். அடுத்தவர் கூறுவதை காது கொடுத்து கவனமாகக் கேட்பவர் விராட் கோலி, மற்றவர்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ எனக்குத் தெரியாது.

  களத்தில் கொஞ்சம் எதிர்வினைகளில் வெளிப்படையாக இருப்பார், இதை வைத்து அவர் கொதிப்பானவர், ஆக்ரோஷமானவர், கர்வம்பிடித்தவர் என்று நினைப்பார்கள், ஆனால் அவர் கொஞ்சம் கூட அப்படிப்பட்டவர் இல்லை. அவர் அனைவரிடமும் கலகலவென பேசுவார். முடிவு எடுக்கும் முன் அனைவரையும் கலந்தாலோசிப்பார்.

  அணித்தேர்வு கூட்டங்களில் அவர் மிகவும் அமைதியாக இருப்பார். பிறர் முடிவுகளில் தலையிட மாட்டார், கலந்தாலோசித்தே முடிவெடுப்பார்.

  விராட் கோலி வீட்டில் வேலையாட்கள் கிடையாது. இவரும் அனுஷ்கா சர்மாவும்தான் அனைவருக்கும் உணவு பரிமாறுவார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? அவர் நம்முடன் இருப்பார், வித்தியாசமின்றி தங்கு தடையில்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பேசுவார். ஏன் உங்களுடன் டின்னர் சாப்பிடக்கூட வெளியே வருவார். மற்ற வீரர்கள் அவர் மீது ஏகப்பட்ட மரியாதை வைத்துள்ளனர். மன உறுதி மிக்கவர்.

  மைதானத்தில் அப்படி இருக்கிறாரே என்று கேட்டால் அவர்தான் கேப்டன் அவர்தான் அழுத்தத்தைக் கையாள்கிறார்.

  இவ்வாறு கூறினார் சரந்தீப் சிங்.
  Published by:Muthukumar
  First published: