முகப்பு /செய்தி /விளையாட்டு / அது பிசிசிஐ அல்ல பிஜேபி - முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஈசான் மானி

அது பிசிசிஐ அல்ல பிஜேபி - முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஈசான் மானி

ஈசான் மானி

ஈசான் மானி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் சேர்மன் ஈசான் மானி இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான தொடர்பு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றி அளித்த பேட்டியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதாவது பிசிசிஐ இன்னொரு பிஜேபிதான் என்று வர்ணித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் சேர்மன் ஈசான் மானி இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான தொடர்பு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றி அளித்த பேட்டியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதாவது பிசிசிஐ இன்னொரு பிஜேபிதான் என்று வர்ணித்துள்ளார்.

ஆளும் கட்சியான பாஜகதான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கட்டுப்படுத்துகிறது, அதன் செயலர் மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய் ஷா என்று கூறிய ஈசான் மானி, பாஜகவின் செல்வாக்கில்தான் பிசிசிஐ செயல்படுகிறது என்றார்.

சமீபத்தில் முன்னாள் பாகிஸ்தான் வாரியத் தலைவர் தாகிர் ஜியா, ‘பிசிசிஐ ஒருபோதும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட மறுத்ததில்லை, ஆனால் அரசுகள்தான் மறுக்கிறது’ என்று கூறினார்.

இந்நிலையில் கிரிக்கெட் பாகிஸ்தானுக்காகப் பேசிய ஈசான் மானி, அமித் ஷா மகன் ஜெய் ஷா போர்டில் செயலாளராக இருப்பதால் பாஜகவின் சொல்படிதான் பிசிசிஐ நடக்கிறது என்கிறார் ஈசான் மானி.

“பிசிசிஐ தலைவராக சவ்ரவ் கங்குலி இருந்தாலும், செயலாளராக இருப்பது யார் என்று தெரியுமா? அதுதான் ஆச்சரியம். ஜெய் ஷா, அமித் ஷா மகன். பிசிசிஐ பொருளாளர் பாஜக அமைச்சரின் சகோதரர். எனவேக் கட்சிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது பிசிசிஐ. அதனால் தான் கிழிந்து போன உறவுகளை நான் ஒட்ட விரும்பவில்லை.

நான் அவர்களுக்கு மறுப்பு சொல்லவில்லை, என்னுடைய நேர்மையை தியாகம் செய்ய விரும்பாததால் நான் ஒட்ட விரும்பவில்லை. இங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலைமை பேட்ரன் அல்லது பிரதமர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலையிடாத வகையில் சட்டத்தை நாங்கள் திருத்தினோம்.

அதாவது வாரிய உறுப்பினர்கள் 8 பேரில் பேட்ரன் இன் சீஃப் 2 பேர்களைத்தான் பரிந்துரை செய்ய முடியும் என்று மாற்றினோம். அடுத்த சேர்மன் யார் என்பதை வாரியம்தான் முடிவு செய்யும். பேட்ரன் எந்த பெயரையும் பரிந்துரை செய்யக் கூடாது என்பதற்காக நான் நிறைய போராடினேன் ஆனால் அதில் தோல்விதான் அடைந்தேன்” என்றார் ஈசான் மானி.

First published:

Tags: BCCI, India vs Pakistan