இத்தனை சாதனைகள் செய்து என்ன பயன்.. அவமானப்படுத்திவிட்டார்களே..! யூனிஸ் கான் குமுறல்!

யூனிஸ் கான்,

ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் முந்தைய நாள் இரவு, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வாணைய தலைவர் ஹாரூன் ரஷீத் என்னை அழைத்தார் என யூனிஸ் கான் தெரிவித்தார்.

  • Share this:
அணிகளை கடந்து கிரிக்கெட்டை ரசிப்போருக்கு பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் நன்கு தெரிந்திருக்கும். பாகிஸ்தான் அணிக்கான டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த ஒரே வீரர் இவர் தான். ஒரு நாள் போட்டிகளிலும் 7249 ரன்களை குவித்துள்ளார். அவருடைய தலைமுறை வீரர்களிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படும் யூனிஸ் கான், பாகிஸ்தானின் எப்போதும் சிறந்த பேட்ஸ்பேன்கள் பட்டியலிலில் தனக்கென தனி இடம் பிடித்து வைத்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரரான யூனிஸ் கான், அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த விதம் குறித்து வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

முந்தைய நாள் இரவு அவருடைய பேச்சின் தொனி மிகவும் ஏமாற்றம் தந்தது, மறு நாள் காலையே எனது ஓய்வு முடிவை அறிவித்தேன் என யூனிஸ் கான் கூறினார்.

வீரர் ஒருவரின் எதிர்ப்பு காரணமாக 2009ம் ஆண்டு பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பில் இருந்து யூனிஸ் கான் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டன்களாக மிஸ்பா உல் ஹக் மற்றும் ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டனர்.

Also Read:  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? - கனே வில்லியம்சனின் சுவாரஸ்ய பதில்

ARY News என்ற சேனலுக்கு யூனிஸ் கான் அளித்துள்ள பேட்டியில், “வீரர்களுக்கு என்னிடம் ஏதேனும் அசெளகரியம் இருந்திருந்தால் அதனை என்னிடமே தெரிவித்திருக்கலாம். அவர்கள் என்னை கேப்டனாக நீக்க விரும்பவில்லை என்று கூறினர், ஆனால் எனது அணுகுமுறையை மாற்ற கிரிக்கெட் வாரியம் என்னுடன் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவரான எஜாஸ் பட்-ஐ ஒரு மூத்த வீரரை வீரர் (கள்) பெரும்பாலும் அப்ரிடி என நினைக்கிறேன்.. அவர் சந்தித்தபோது, ​​கேப்டனை மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். என்னைப் பொறுத்தவரை அது கேப்டன்ஷிப் லட்சியங்களைப் பற்றியது.

யூனிஸ் கான்,


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் நான் தேர்வு செய்யப்படாததால் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று முன்பே ஒரு முடிவை எடுத்தேன்.

Also Read:   பவுன்சர் பந்துவீச்சை இப்படியா அடிப்பார்கள்: இர்ஃபான் பதானின் WTC Final விமர்சனம்

ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் முந்தைய நாள் இரவு, பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வாணைய தலைவர் ஹாரூன் ரஷீத் என்னை அழைத்தார், அவரிடம் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன் என்றேன். அவர் திரும்பி என்னிடம் முரட்டுத்தனமான டோனில், என்னை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், நான் அணி நிர்வாகத்தைக் கேட்டு அவர்கள் விரும்பியபடி விளையாட வேண்டும் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரது தொனியில் நான் மிகவும் வருத்தப்பட்டேன், அதனால்தான் மறுநாள் காலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தேன். இவ்வாறு யூனிஸ் கான் தெரிவித்தார்.

யூனிஸ் கான் சமீபத்தில் பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: