ரமீஸ் ராஜா ஒரு பாகிஸ்தான் விரோதி, இந்திய ஆதரவாளர், - முன்னாள் பவுலர் சர்பராஸ் நவாஸ் தாக்கு

ரமீஸ் ராஜா.

ஒரு காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இம்ரான் கானும் சர்பராஸ் நவாசும் வீசினால் உலகின் எந்த ஒரு பேட்டிங் வரிசையும் நடுங்கும், அந்த சர்பராஸ் நவாஸ், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நியமிக்கப்படலாம் என்ற செய்திகளையடுத்து ரமீஸ் ராஜா ஒரு பாகிஸ்தான் துவேஷி, இந்திய ஆதரவாளர் என்று சாடியுள்ளார்.

 • Share this:
  ஒரு காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இம்ரான் கானும் சர்பராஸ் நவாசும் வீசினால் உலகின் எந்த ஒரு பேட்டிங் வரிசையும் நடுங்கும், அந்த சர்பராஸ் நவாஸ், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா நியமிக்கப்படலாம் என்ற செய்திகளையடுத்து ரமீஸ் ராஜா ஒரு பாகிஸ்தான் துவேஷி, இந்திய ஆதரவாளர் என்று சாடியுள்ளார்.

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு ரமீஸ் ராஜாவை நியமிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்தியா எது செய்தாலும் அதற்குச் சமமாக அதைப்போன்ற ஒன்றை செய்பவர் இம்ரான் கான். இங்கு கங்குலியை பிசிசிஐ தலைவராக்கியவுடன் கிட்டத்தட்ட அதே ஆளுமை மிக்க ரமீஸ் ராஜாவை அங்கு அவர் தலைவராக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

  இந்நிலையில் கருத்துக்களை அந்தக் காலம் முதலே வெளிப்படையாக பேசி பல சமயங்களில் பெருந்தலைகளுக்கு தர்ம சங்கடம் விளைவிக்கும் சர்பராஸ் நவாஸ் இப்போதும் ரமீஸ் ராஜா ஒரு பாக் விரோதி, இந்திய ஆதரவாளர் என்று ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

  இது தொடர்பாக சர்பராஸ் நவாஸ் இம்ரான் கானுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது:

  ரமீஸ் ராஜாதான் அடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராவதற்கு உங்கள் ஒப்புதல் உண்மையென்றால் அவர் வெட்கங்கெட்ட வகையில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதையும் கிரிக்கெட்டில், ஐசிசியில் இந்தியாவின் ஆதிக்கத்தை வெட்கங்கெட்ட வகையில் ஆதரிப்பவர் என்பதையும் நான் கூற விரும்புகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஐசிசியின் இந்திய ஆதிக்கத் திட்டங்களுக்கு அடகு வைக்கும் முனைப்பு கொண்டவர் ரமீஸ் ராஜா என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  ஐசிசி உறுப்பினர்களுடன் நல்ல உறவில் இருக்கும் முன்னாள் லெஜண்ட் மாஜித் கான் அல்லது ஐசிசியின் முன்னாள் தலைவர் ஜாகீர் அப்பாஸ் ஆகியோடை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிப்பதுதான் சரியாக இருக்கும் .

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரமீஸ் ராஜாவை நியமித்தால் அது தேச உணர்வுக்கு எதிரானது. மேலும் நாட்டு மக்களின் தேசப்பற்று உணர்வை அவமதிப்பதாகும்.

  என்று தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: