கிறிஸ் கெய்ன்ஸ் நலம் பெற்றார்: உயிர் காக்கும் கருவிகள் அகற்றம்

chris cairns

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயிருக்குப் போராடி வந்த முன்னாள் நியூசிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ் உடல் நிலை தேறிவிட்டார், உயிர் காக்கும் கருவியும் அகற்றப்பட்டது.

 • Share this:
  ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு சமீபத்தில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதயத்தில் கோளாறு ஏற்பட்டு அதற்காக சில ஆபரேஷன்களும் அவர் செய்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும், ஆனால் சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

  உடலில் இருக்கும் முக்கியமான ரத்த நாளம் கிழிந்து திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை நடந்து அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு இப்போது உயிர் பிழைத்துள்ளார்.

  Also Read: நெஞ்சில் உரமுமின்றி... நேர்மைத் திறமுமின்றி..- லார்ட்ஸ் தோல்வி குறித்து டேவிட் லாய்ட் புலம்பல்

  சிட்னி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ் கெய்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளிலிருந்து விடுதலை பெற்றார். உடல் நிலை தேறி தன் குடும்பத்தினருடம் கெய்ன்ஸ் பேசினார் என்று கூறியுள்ளது.

  chris cairns


  51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், ஆனால் அதன் பிறகும் அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து சிட்னியில் உள்ள செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இன்னொரு சர்ஜரி நடந்தது.

  இப்போது அவர் நலமடைந்துள்ளார்.

  அவரது காலத்தில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார், குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனிச்சிறப்பான வீரராக விளங்கினார். கிறிஸ் கெய்ர்ன்ஸின் தந்தை லான்ஸும் நியூசிலாந்து தேசிய அணிக்காக விளையாடியவர் தான்.

  தனது கிரிக்கெட் கேரியரில் நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளிலும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணணை செய்பவராக மாறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் இந்தியாவில், இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் டி20 தொடர் நடைபெற்றது. இரண்டு சீசன் மட்டுமே விளையாடப்பட்ட இந்த போட்டிகளில் சண்டிகர் லயன்ஸ் என்ற அணியின் கேப்டனாக கிறிஸ் கெய்ர்ன்ஸ் செயல்பட்டார். அப்போது நடைபெற்ற போட்டிகளில் கிறிஸ் கெய்ர்ன்ஸ் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

  பல சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் இந்த குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி நிரபராதியாக வெளியே வந்தார் கிறிஸ் கெய்ன்ஸ்.
  Published by:Muthukumar
  First published: