மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் இந்திய கேப்டன் லெஜண்ட் வினு மன்காடின் மகனுமான ராகுல் மன்காட் புதன்கிழமை காலமானார். இந்த மாத தொடக்கத்தில், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
ராகுல் மன்காடின் இன்னொரு சகோதரர் அசோக் மன்காட், இருவரும் ஒருகாலத்தில் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்திகளாகத் திகழந்தது குறிப்பிடத்தக்கது.
1955ம் ஆண்டு ராகுல் மன்காட் மும்பையில் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 66.
புதன்கிழமை செய்தி வெளியானவுடன், சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டி.ஏ.சேகரும் ட்விட்டரில் ராகுல் மன்காட்டின் மறைவு குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் அமோல் கர்ஹாத்கர் ஆகியோர் ட்வீட் செய்து ராகுல் மன்காட்டின் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர், மும்பையின் மிகச் சிறந்த வீரர், எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அற்புதமான நபர்.. ராகுல் மன்காட் காலமானார். ஓம் சாந்தி ஜிகாபாய்,” என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.
மும்பை அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய மன்கட், பலமுறை ரஞ்சி கோப்பையை வென்றவர். அவரது சகோதரர்களான அசோக் மற்றும் அதுல் இருவரும் கிரிக்கெட் வீரர்கள். சகோதரர் அசோக் மன்காட் இந்தியாவுக்காக 22 டெஸ்ட் போட்டிகள் தவிர முதல்தர ஆட்டங்களில் மும்பைக்காக விளையாடியுள்ளார். அதுல் மூன்று ரஞ்சி டிராபி போட்டிகளில் சவுராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ராகுல் மன்கட்டின் கிரிக்கெட் வாழ்க்கை 1972 முதல் 1985 வரை நீடித்தது, இதன் போது அவர் மும்பைக்காக 47 முதல் தர போட்டிகளிலும் 10 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடி முறையே 2111 மற்றும் 66 ரன்கள் எடுத்தார்.
இப்போது வினு மன்காட் மகன்களில் அசோக் மன்காட், ராகுல் மன்காட், அதுல் மன்காட் யாரும் உயிரோடு இல்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.