பணத்திற்காக உலகக் கோப்பை தாரைவார்க்கப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு சங்ககாரா பதிலடி

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோசடி நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியதற்கு, அப்போதைய கேப்டன் சங்ககாரா பதிலடி கொடுத்துள்ளார்

பணத்திற்காக உலகக் கோப்பை தாரைவார்க்கப்பட்டதா? குற்றச்சாட்டுக்கு சங்ககாரா பதிலடி
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி (கோப்புப்படம்)
  • Share this:
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் விளையாடிய இந்தியா அபார வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், அப்போது இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தனன அலுத்கமாகே, இலங்கை அணி பணம் வாங்கிக்கொண்டு கோப்பையை விற்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

”நான் அப்போது அமைச்சராக இருந்த போதும் இதைச் சொன்னேன். அப்போட்டியில் இலங்கை வெற்றிபெற வேண்டியது. ஆனால் சமரசம் செய்யப்பட்டது” என்று கூறினார்.


ஒரு நாட்டின் விளையாடுத்துறை அமைச்சராக இருந்தவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்போது அணியின் கேப்டனான இருந்த சங்ககாரா கூறுகையில், மஹிந்தானந்த அளுத்கமகே, தன்னிடம் உள்ள அனைத்து சாட்சியங்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஊழல் மற்றும் பாதுகாப்பு பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

”தேர்தல் காலம் என்பதனால் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளனர். பெயர்கள் மற்றும் சாட்சியங்களை வெளிப்படுத்துங்கள்" என்று முன்னாள் வீரர் மஹேலா ஜெயவர்த்தனேயும் கருத்து தெரிவித்துள்ளார்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading