இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு குறிவைக்கும் நியூசிலாந்து கோச்!

மைக் ஹெசன்

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரியின் பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் உட்பட மற்ற பயிற்சியாளர்களுக்கான பதவிகளுக்கு ஜூலை 30 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டுமென்பதையுடம் பிசிசிஐ அறிவித்திருந்தது .

இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் விண்ணப்பிக்க முடிவெடுத்துள்ளார். ஆறு வருடங்களாக நியூசிலாந்து தலைமை பயிற்சியளாராக இருந்து வந்த மைக் ஹெசன் கடந்த 2018ம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். இவரது பயிற்சி காலத்தின் போது  நியூசிலாந்து அணி 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறியது.

மைக் ஹெசன் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ அறிவித்த தகுதி மைக் ஹெசனுக்கு உள்ளதால் விரைவில் அவர் விண்ணப்பிக்க உள்ளதாக கிரிக்கெட் நெக்ஸ்ட் (cricket next) தகவல் தெரிவித்துள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: