ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம்... இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!

Former Indian cricket team coach #TusharArothe arrested in #IPLbetting case | விடுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 19 பேரை கைது செய்தனர்.

news18
Updated: April 3, 2019, 1:34 PM IST
ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டம்... இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!
துஷார் ஆரோத்தே மற்றும் மிதாலி ராஜ்.
news18
Updated: April 3, 2019, 1:34 PM IST
ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே கைது செய்யப்பட்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இந்தியாவில் களைகட்டி வருகிறது. நேற்று முன்தினம் மொஹாலியில் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியின்போது குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அலகாபுரி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பெரிய திரையில் ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்ட விடுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 19 பேரை கைது செய்தனர்.

Tushar Arothe, Mithali Raj
துஷார் ஆரோத்தே மற்றும் மிதாலி ராஜ்.


அதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அனைவரிடம் இருந்தும், சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மகளிர் உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி வீராங்கனைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், பயிற்சியாளர் பதவியில் இருந்து துஷார் ஆரோத்தே நீக்கப்பட்டார். தற்போது சூதாட்டப் புகாரில் சிக்கிய இவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...