முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்... வீரர்களை தேர்வு செய்ததில் முன்பகை...!

Former Indian cricketer assaulted by goons | படுகாயம் அடைந்த பண்டாரியை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். #AmitBhandari

news18
Updated: February 11, 2019, 6:18 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது கொடூர தாக்குதல்... வீரர்களை தேர்வு செய்ததில் முன்பகை...!
டெல்லி அணி தேர்வாளர் அமித் பண்டாரி.
news18
Updated: February 11, 2019, 6:18 PM IST
டெல்லி மாநில அணியை தேர்வு செய்வதில் ஏற்பட்ட முன்பகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மீது ஆள் வைத்து கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அமித் பண்டாரி, டெல்லி மாநில சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வாளராகவும் இருந்து வருகிறார். டெல்லியில் உள்ள செயிண்ட்.ஸ்டீபன் மைதானத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான தேர்வு நடைபெற்றது.

Amit Bhandari, அமித் பண்டாரி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி. (AFP)


அதில் கலந்துகொண்ட தேர்வாளர் அமித் பண்டாரி, வீரர்களை நேரில் சந்தித்து தேர்வு செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், அமித் பண்டாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், அவர் பலத்த காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த பண்டாரியை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Delhi Police, டெல்லி காவல்துறை
டெல்லி காவல்துறை விசாரணை.(ANI)


வீரர்களைத் தேர்வு செய்ததில் ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொடூரத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அணித் தேர்வாளரை ஆள் வைத்து அடித்த சம்பவம் டெல்லி கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

Also Watch..

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...