• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அமெரிக்காவில் கலக்கும் யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்

அமெரிக்காவில் கலக்கும் யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன்

உன் முக்த் சந்த்

உன் முக்த் சந்த்

இந்தியாவுக்கு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை தன் கேப்டன்சியில் வென்ற டெல்லி வீரர் உன்முக்த் சந்த் அமெரிக்காவில் கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார்.

  • Share this:
    உன்முக்த் சந்த் அபாரமான ஒரு தொடக்க வீரர், ஆக்ரோஷ அதிரடி வீரர், சேவாகின் இடத்தை நிரப்புவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஏனோ இவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை, இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் அமெரிக்காவுக்குச் சென்றார், அங்கு கிரிக்கெட் தொடர்களில் ஆடி வருகிறார். ரெசிடன்சி காலக்கட்டத்தைக் கடந்து விட்டால் உன்முக்த் சந்த் அமெரிக்க அணிக்கு ஆட முடியும்.

    இப்போது டி20 லீகில் சிலிக்கன்வாலி அணிக்கு கேப்டன்சி செய்து வரும் உன்முக்த் சந்த் கோப்;பையை வென்று சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலேயே இந்திய கிரிக்கெட்டிலிருந்து ரிட்டையர் ஆனதால் இவர் சுதந்திரமாக எந்த நாட்டு அணிக்கு வேண்டுமானாலும் ஆடலாம், எனவே அவர் அமெரிக்காவுக்கு ஆடுவார். சிலிக்கன்வாலி அணிக்காக இறங்கிய கேப்டன் உன்முக்த் சந்த் 43 பந்துகளில் 59 ரன்கள் விளாசியதில் இவரது அணி கோப்பையை வென்றது.

    இவரும் ராகுல் ஜரிவாலாவும் சேர்ந்து 12 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 102 ரன்களைச் சேர்த்தனர். உன்முக்த் சந்த் 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை விளாசினார். முன்னாள் இலங்கை வீரர் ஷேகன் ஜெயசூரியாவும் வெளுத்து வாங்க சிலிக்கன்வாலி அணி 168/5 என்ற ஸ்கோரை 20 ஓவர்களில் எட்டியது. இலக்கை விரட்டிய கிரிஸிலிஸ் அணி 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு தோல்வி தழுவ கோப்பியை வென்றார் உன்முக்த் சந்த்.

    ஒரு காலத்தில் ரெகுலராக இந்திய ஏ அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர்தான் உன்முக்த் சந்த். டெல்லி, உத்தராகண்ட் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியுள்ளார். இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 இந்திய அணியில் உத்தேச அணியில் இடம்பெற்றிருந்தார். டி20 உலகக்கோப்பை 2014 உத்தேச அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

    2012ம் ஆண்டில் யு-19 உலகக்கோப்பையை இந்திய அணி இவரது தலைமையில் வென்றபோது சென்சேஷனல் வீரராகத் திகழ்ந்தார் உன்முக்த். 28 வயதில் பிசிசிஐ-க்கு குட் பை சொல்லி விட்டு, உலகக் கிரிக்கெட்டில் தன் தடத்தைப் பதிக்கச் செல்வதாக சென்று விட்டார். இவர் சென்றது இந்திய கிரிக்கெட்டுக்கும் இழப்பு அவரும் இந்திய கிரிக்கெட்டை இழந்து விட்டார் என்றே கூற வேண்டும்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: